அஜித் போட்ட உத்தரவு..!நிகழ்ச்சிக்கு தடை..!
அடுத்த மாதம் மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாள் கொண்டாடப்படவிருக்கிறது.
ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் பிரம்மாண்டமாக சமூக வலைதளங்களில் பல முன்னணி பிரபலங்களைக் கொண்டு காமன் டிபியை தெறிக்கவிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் அதற்குள் அஜித் அலுவலகத்தில் இருந்து பிரபலங்களுக்கு தனித் தனியே போன் செய்து நிகழ்ச்சிக்கு தடைபோடப்பட்டது. இதனால் ரசிகர்கள் நினைத்ததை நடத்துவதற்கு தடை போடபட்டு உள்ளது.
அஜித்தின் காமன் டிபியை வெளியிடவதற்கு தயாரக இருந்த நடிகர் சாந்தனு, ஆதவ் கண்ணதாசன், அருண் விஜய், ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, ரைசா வில்சன், யாஷிகா ஆனந்த், நித்தி அகர்வால், ஆர்த்தி, ராகுல் தேவ், பார்வதி நாயர், சதீஷ் சிவலிங்கம் என பல பிரபலங்களை வைத்து காமன் டிபியை வெளியிடத் தயாராக இருந்தனர் ரசிகர்கள்.
ஆனால் அஜித் நோ செலிபிரேஷன் என்று சொல்லி ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளிவிட்டார். உலகம் முழுபதும் கொரோனா பாதிப்பால் 2 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் மேலான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எப்போதும் அஜித் பெரிதாக கொண்டாட்டத்தை விரும்பாதவர். எனவே தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடைவிதுத்துள்ளார் அஜித். இதே போல் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என்பது குறிப்பிடதக்கது.