அஜித் படத் தயாரிப்பாளருக்கு கொரோனாவா?
மும்பை; பிரபல தயாரிப்பாளர் ஆன போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர். தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இயக்குநர் எச்.வினோத்துடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தார். தற்போது, மீண்டும் இயக்குநர் எச். வினோத், மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தையும் இதே கூட்டணியில் போனி கபூரே தயாரிக்கிறார்.
மும்பையில் தனது மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூருடன் வசித்து வருகிறார் போனி கபூர். ஊரடங்கு பிறப்பித்தது முதல் அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை.
இந்த சூழ்நிலையில் அவரது வீட்டில் வேலைசெய்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போனி கபூர் வீட்டில் வேலை பார்த்து வந்த சரண் சாஹீவுக்கு மே 16ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவல் திரைத்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. போனி கபூர் வீட்டில் வேலைசெய்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருக்கும் அவரது மகள்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டனர் பாலிவுட் முதல் கோலிவுட் வரை.
இந்த சூழ்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூருக்கு கொரோனா என்ற தவறான தகவலும் பரவியது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தனது வீட்டு பணிபுரிந்த ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது உண்மை தான். இப்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக் கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தில் யாருக்கும் தொற்றின் பாதிப்பு இல்லை. எனக்கும் எனது மகள்களுக்கும் எந்த நோய் தொற்று அறிகுறியும் இல்லை.
அப்படியிருந்தும் எங்களை நாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். கூடிய சீக்கிரமே அந்த பணியாளர் நோய் தொற்றில் இருந்து விரைவில் குணமாகி எங்கள் வீட்டிற்கு வருவார். ஆகவே யாரும் கவலைப்படவேண்டாம் என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.