ஐஸ்வர்யாராய்,மகள் ஆரத்யா கொரோனா தொற்று உறுதி’; ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை; இந்தி திரையுலகில் பிரபல நடிகரான அமிதாப்பச்சன் மற்றும் மகன் அபிஷேக் பச்சனைத் தொடர்ந்து மருமகள் ஐய்வர்யாராய், போத்தி ஆரத்யாயுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரபல நட்சத்திர நடிகர் அமித்தாப் பச்சன் மற்றும் அவரது மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை நானாவதி மருத்துவமனை இன்று காலை இருவருக்கும் தொற்று இருபதை உறுதி செய்து அறிக்கைவெளியிட்டது. நடிகர் அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே இருபதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக தெரிவித்தனர்.
நடிகர் அமிதாப்பச்சரைத் தொடர்ந்து அவரது மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகும் என்று மும்பை மாநகராட்சி ஏற்கனவே கூறியிருந்தது.
இவர்கள் குணமடைந்து வரவேண்டும் என்று திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். அமிதாப்பச்சன் உடல் நிலைகுறித்து நடிகர் ரஜினிகாந் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அமிதாப் பச்சனும் மகன்அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள் என்று தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து இன்று அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் பேத்தி ஆரத்யாவுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனியன்