“எவனோ ‘குட் பேட் அக்லி’னு பேர் வைக்கிறான்!”: ‘அகமொழி விழிகள்’ விழாவில் கே.ராஜன் ஆவேசம்
சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”. இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் K. ராஜன், இயக்குநர் பேரரசு, ப்ரொட்யூசர் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், திரையரங்கு சங்க பொருளாளர் திருச்சி முரளி
உள்ளிட்டோர் இவ்விழாவில் நடந்துகொண்டனர்.
நிகழ்வில் தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது…
“இந்தத் படத்தின் தலைப்பை கேட்கும்போதே மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. கேரளா நண்பர்கள் இந்தப்பட விழாவிற்கு அழைத்தார்கள். மலையாள பட டப்பிங் என நினைத்துத் தான் வந்தேன். ஆனால் மிக அழகான தமிழ்ப் படமாகச் செய்துள்ளார்கள். அவ்வளவு அழகாக எடுத்துள்ளார்கள். டிரெய்லர், மூணு பாடல் எல்லாமே அவ்வளவு சிறப்பாக இருந்தது. குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.
இந்த வருடம் வெறும் 4 படம் வெற்றி. போன வருடம் 220 படங்களில் 8 படம் தான் வெற்றி. சின்ன படங்களில் 15 படம் வெற்றி. பெரிய ஹீரோ பின்னால் போனால் படம் ஓடாது. கதை நன்றாக இருந்தால் மட்டும் தான் ஓடும். நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, இந்த மாதிரி புது நாயகன் நாயகியைப் போட்டுப் படமெடுத்தால் படம் ஓடும்.
‘அகமொழி விழிகள்’… என்ன அழகான டைட்டில். அஜித் எப்போதும் தமிழ் டைட்டில் வைப்பார் ஆனால் இயக்குநர் எவனோ ‘குட் பேட் அக்லி’ என டைட்டில் வைத்து விட்டான். இப்போது சிவக்குமார் மகன் சூர்யா ‘ரெட்ரோ’ என டைட்டில் வைத்துள்ளார். தமிழ் தலைப்பில் படம் வருவது குறைந்து விட்டது.
கேரள சகோதரர் தமிழில் டைட்டில் வைக்கிறார் தமிழனுக்குத் தமிழில் டைட்டில் வைக்கத் தெரியவில்லை. நல்ல மனம் குளிர்ந்து மகிழ்ந்து அகமொழி விழிகள் ஜெயிக்க வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி” என்றார் கே.ராஜன்.
மே மாதம் 9ஆம் தேதி தமிழகமெங்கும் இப்படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.

