“நாங்க அப்படி இல்லே! நீங்க ஏன் அப்படி இருக்கீங்க?”: ‘அகமொழி விழிகள்’ மேடையிலேயே பேரரசு விளாசல்!

“நாங்க அப்படி இல்லே! நீங்க ஏன் அப்படி இருக்கீங்க?”: ‘அகமொழி விழிகள்’ மேடையிலேயே பேரரசு விளாசல்!

654சச்சுஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில்  பவுலோஸ் ஜார்ஜ் தயாரிப்பில், சசீந்திரா கே. சங்கர் இயக்கத்தில் மாறுபட்ட கதைக்களத்தில், அட்டகாசமான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “அகமொழி விழிகள்”.  இப்படத்தில் ஆதம் ஹசன், நேஹா ரத்னாகரன் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர் இவர்களுடன், தர்மஜன், நவேதயா ஷாஜூ, குலப்புலி லீலா, ராஜீவ் கண்ணன் , சி.கே.ஆர், ஹரிதா, ராஷீ, தீபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடை பெற்றது.

படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் கே.ராஜன், விநியோகஸ்தர் சங்கத் தலைவர் K. ராஜன், இயக்குநர் பேரரசு, ப்ரொட்யூசர் கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், திரையரங்கு சங்க பொருளாளர் திருச்சி முரளி
உள்ளிட்டோர் இவ்விழாவில் நடந்துகொண்டனர்.நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசியதாவது…,

“அகமொழி விழிகள் பெயரே மிக அழகாக உள்ளது. தமிழ்த் தெரியாத தயாரிப்பாளர் தனது மொழியில் தமிழை எழுதி வைத்துப் படிக்கிறார். தமிழ் மீதான அவரது மரியாதை வியக்க வைக்கிறது. நான் சிவகாசி படமெடுத்த போது அப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது அப்போது தெலுங்கில் நடந்த விழாவில் நான் கலந்து கொண்டு பேச கஷ்டப்பட்டேன், இப்போது தான் புரிகிறது, நான் தமிழில் எழுதி வைத்துப் படித்திருக்கலாம். இப்படம் பாடல் விஷுவல்ஸ் எல்லாமே நன்றாக இருக்கிறது.

தமிழ் சினிமா அழிந்து வருவதாகச் சொல்கிறார்கள். அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தியேட்டரில் டிக்கெட் எவ்வளவு விற்க வேண்டும் என நிர்ணயிக்கும் போது, பாப்கார்னும் இந்த விலைக்குத் தான் விற்க வேண்டும் என நிர்ணயிக்க வேண்டும். ஏன் இதை அரசாங்கம் செய்யக் கூடாது. மக்களுக்காகத் தானே அரசாங்கம்.

தமிழர்களாகிய நாம் மொழி பாகுபாடு பார்ப்பதில்லை. தமிழ் தயாரிப்பாளர் உருவாக்கும் படத்தில் நாயகி தெலுங்கு,  நாயகன் மலையாளம், ஒளிப்பதிவாளர் கன்னடம் என்று இருப்பார்.  பிற மொழியைச் சேர்ந்த எத்தனையோ நாயகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், நாயகிகள் என பலரையும் நாம் ஏற்கிறோம்.

ஆனால் பிற மொழியில் அப்படிஇல்லை. இந்தப் படத்தில்கூட பாருங்கள்..  தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ, ஹீரோயின், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் எல்லோரும் மலையாளிகள்.

எப்போதும் கதையை நம்பி படமெடுங்கள். என் மகன் நடிக்க வேண்டும், தம்பி மியூசிக் போட வேண்டும் எனப் படமெடுக்காதீர்கள், அப்படிப் படமெடுத்தால் ஓடாது. இந்தப்படம் சின்ன பட்ஜெட்டில் அசத்தியுள்ளார்கள். விஷுவல் பார்க்க பெயிண்டிங் மாதிரி உள்ளது. அத்தனை உழைத்துள்ளார்கள். இது மாதிரி படம் வெற்றி பெற வேண்டும் இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நன்றி.

Related Posts