‘நாற்கரப்போர்’ விழாவில் நமீதா சொன்ன அட்வைஸ்!
வி6 பிலிம்ஸ் – வேலாயுதம் தயாரிக்க, வி ஹவுஸ் புரடக்சன் சார்பில் சுரேஷ் காமாட்சி தமிழ்நாடு முழுதும் திரையரங்குகளில் வெளியிடும் திரைப்படம், ‘நாற்கரப்போர்’.
ஸ்ரீ வெற்றி இயக்கும் படம். இதில் இறுக்கப்பற்று திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற அபர்ணதி நாயகியாக நடிக்கின்றார். மேலும் லிங்கேஷ், அஸ்வின், கபாலி, சுரேஷ் மேனன் உள்பட பலர் நடிக்கின்றனர்.
அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன் ஒளிப்பதிவாளர்களாக அறிமுகமாகிறார்கள். இத்திரைப்படத்திற்கு தினேஷ் ஆண்டனி இசையமைக்கிறார். சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘நாற்கரப்போர்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை நமீதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது,”தமிழ்நாடு மக்களுக்கு நல்ல படம் வேண்டும்; அதில் என்டர்டெயின்மென்ட் இருக்க வேண்டும். எமோஷனல், சென்டிமென்ட்& எதாவது மெசேஜ் சொல்ற மாதிரி படங்கள் பிடிக்கும்.
100 கோடி ரூபாய் பட்ஜெட் படங்கள் வேண்டாம். மிகப்பெரிய இசையமைப்பாளர் கூட வேண்டாம். ஆனால் நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு பிடிக்கும்.
அது போன்ற அற்புதமான –ந ல்ல மெஸேஜ் சொல்லும் திரைப்படம்தான் நாற்கரப்போர்” என்றார்.
உங்கள் குழந்தைகள் விளையாட்டுத்துறையில் ஆர்வம் இருந்தால் பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விளையாட்டுத் துறை என்பது மிகப்பெரிய பலம். எல்லா குழந்தைகளுக்கும் விளையாட்டு ரொம்ப முக்கியம்” என்றார்.
பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களிடம், “உங்கள் சட்டை பாக்கெட்டில் செல்போன் வைக்காதீர்கள், அந்த ரேடியேஷனால் இதயத்துக்கு ஆபத்து” என ஆலோசனை தெரிவித்தார்.
