மூன்று மாநில அரசுக்கு உதவிய நடிகர் விஜய்..!
இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.
இந்த பணிக்கு அரசுக்கு நிதியுதவி செய்யுமாறு பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது வேண்டுகோளுக்கு, திரைப்பிரபலங்கள், தொழில் அதிபர்கள், சாமானியர்கள் என உதவி வருகின்றனர்.அவர்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி கொடுத்துள்ளார்.
அவர் 1.30 கோடி நிதியை மூன்று மாநில அரசுக்கு பகிர்ந்துள்ளார். பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், பெஃப்சி தொழிலாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்தும் தனது நிதியை பகிந்து கொடுத்துள்ளார் விஜய்.