இறந்த தந்தையை பார்க்க முடியால் தவிக்கும் பிரபல நடிகர்..!

ஊரடங்காள் தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க போராடும் நடிகர். பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் 80 மற்றும் 90களில் மிகப் பெரிய நடிகராகவும் நடனம், ஆக்‌ஷன் ஸ்டைல் என அதிக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர்.

இவர் தமிழில் ஆதி நடிப்பில் ’யாகவாராயினும் நாகாக்க’ என்ற படத்தில் தாதாவாக நடித்திருந்தார்.  இவர் சுமார் 576 படங்களில் நடித்திருதாலும்  இவருக்கும் இதுவே முதல் தமிழ் படம். மற்றும் இந்தப்படத்தில்  நிக்கி கல்ராணி, பசுபதி உட்பட பலர் நடித்திருந்தனர்

மும்பையில் வசித்து வந்த ராஜ்யசபா எம்.பியாக இருந்த மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை 95 வயதான பசந்த்குமார் சக்கரவர்த்தி. வயது முதிர்வு காரணமாக சிறுநீரகப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவதிப்பட்டு வந்த இவர் நேற்று உயிரிழந்தார்.

படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்ற மிதுன் சக்கரவத்தி ஊரடங்காள்  அங்கேயே தங்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சமயத்தில் தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

                                                             பசந்த்குமார்

இருந்தும் மிதுன் சக்கரவத்தி தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள மும்பைக்கு செல்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.முப்பையில்  மிதுனின் தாயும், மூத்த மகன் மிமோ சக்கரவர்த்தியும், இறுதிச்சடங்குக்கான வேலைகளைப் பார்த்து வருவதாக்கூறப்படுகிறது.

 மறைந்த மிதுனின் தந்தை பசந்த்குமார் சக்கரவர்த்திக்கு ஏராளமான இந்தி பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மிதுன் சக்கரவர்த்திக்கு மும்பையில் சொந்தமான பங்களா இருந்தும் இவர் தமிழகத்தில் ஊட்டியில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts