ரேனிகுண்டா நடிகர் வறுமை…!உதவிக்கரம் நீட்டிய லாரன்ஸ்..!
இந்திய முழுவதும் 144 தடை உத்தரவு செய்யப்பட்டுள்ளதால் பலர் தனது வாழ்வாதரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதில் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் உண்டு. துணை நடிகர்கள், திரைக்குப் பின்னால் இருக்கும் லைட்மேன் உட்பட அனைவரின் வாழ்வாதரத்தை பாதித்துள்ளது கொரோனா ஊரடங்கு.
ரேனிகுண்டா, கோலமாவு கோகிலா, நீர்ப்பறவை, பில்லா2 படத்தில் நடித்த கார்த்திக் என்ற தீப்பெட்டி கனேசன் வறுமையில் வாடுகிறார். நேற்று அவர் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.அதில் தான் வறுமையில் வாடுவதாகவும், பிள்ளைகளுக்கு பால் வாங்க,படிக்கவைப்பதற்கும் குடும்பம் நடத்த தான் கஷ்டப்படுவதாக கண்ணீர் விட்டிருந்தார். மேலும் அவர் நடிகர் அஜித் தான் என்னை சினிமாவில் எனது உன்மை பெயரை வைத்து கார்த்திக் என்று கூப்பிடுவார். எனது கஷ்டமான இந்த சூழ்நிலையில் நிச்சியமாக உதவிசெய்வார் தயவு செய்து இதை அஜித் சாரிடம் கொண்டு போய் சேருங்கள் என்று கண்ணீர் வழிய கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர் வெளியிட்ட வீடியோடி விட்டரில் வைரல் ஆனது. அந்த வீடியோவிற்கு பதில் அளித்துள்ள லாரன்ஸ் இந்த வீடியோவை அஜித் சாரின் மேனேஜருக்கு பகிர்வதாகவும், அஜித்துக்கு இது போய் சேர்ந்தால் அவர் நிச்சயம் உதவி செய்வார். அவர் மிகவும் இரக்க குணம் கொண்ட மனிதர். இவரது குழந்தைகளின் படிப்புக்கு நிச்சியமாக நான் உதவுகிறேன் என பதில் அளித்துள்ளார்.