பரபரப்பை கிளப்பும் ஹரா டீசர்!

பரபரப்பை கிளப்பும் ஹரா டீசர்!

தமிழ் திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழா படங்கள் தந்த, நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் ‘ஹரா’. இப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்துள்ளனர். மாறுபட்ட களத்தில், ஆக்ஷன் அதிரடிப் படமாக படத்தை இயக்கியுள்ளார் விஜய் ஸ்ரீ ஜி.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ் மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இசை: ரஷாந்த் அர்வின், ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி, படத்தொகுப்பு: குணா.விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டு பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள நடைபெற்றது.

பரபரப்பான காட்சிகளைக் கொண்ட படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

டீசர்:

ஹரா டீசர்

Related Posts