ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: கடும் பிரிவுகளில் வழக்கு!

ஏ.ஆர்.ரஹ்மான் விவகாரம்: கடும் பிரிவுகளில் வழக்கு!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி காரணமாக, ரசிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.  முறையான ஏற்பாடு செய்யாதது, பார்க்கிங் வசதி இல்லாதது, அதிக அளவில் டிக்கெட்டுகள விற்றது என ரசிகர்கள் அனுபவத்த துன்பங்கள் ஏராளம்

இது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. சமூக வலைதளத்தில் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை பதவு செய்தனர்.

இதையடுத்து காவல் துறை விசாரிக்க ஆரம்பித்தது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் 406 உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்றம் உறுதி செய்யப்பட்டால், 3 ஆண்டுகள் வரை சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும்.

 

 

 

Related Posts