‘வி ஹவுஸ்’ IN ‘ஏழு கடல் ஏழுமலை’.: 100 கோடி வசூல் நாயகர்கள் கூட்டணியில் அக். 1 ரிலீஸ்!

‘வி ஹவுஸ்’ IN ‘ஏழு கடல் ஏழுமலை’.: 100 கோடி வசூல் நாயகர்கள் கூட்டணியில் அக். 1 ரிலீஸ்!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்

இப்படத்தில் நிவின்பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஒரு எலியும் முக்கிய பாத்திரத்தில் வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நிவின்பாலி மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகன் வரிசையில் உயர்ந்துள்ள சூரி இருவரும் இணைந்து நடித்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மலையாளத்தில் நிவின்பாலி நடித்த ‘சர்வம் மாயா’ திரைப்படமும் ஓணம் பண்டிகைக்கு வெளியான அவரது ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படமும் பிரம்மாண்ட வசூல் சாதனை செய்து அவரை அசைக்க முடியாத நட்சத்திரமாக மாற்றியுள்ளது. தமிழ் ரசிகர்களின் பேராதரவும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.

அதேபோல சமீபத்தில் வெளியான ‘மண்டாடி’ படத்தின் மிகப்பெரிய வெற்றி மூலம் நடிகர் சூரியும் வசூல் நாயகனாக உயர்ந்துள்ள நிலையில், இவர்கள் இணைந்துள்ள ‘ஏழு கடல் ஏழுமலை’ அக்டோபர் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கமாய் actor துல்கர் சல்மானின் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமான வேஃபாரர் ஃபிலிம்ஸ் இப்படத்தின் கேரள வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது.

துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்ட ‘லோகா சாப்டர்’, ‘சந்திரா’ திரைப்படங்கள் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த நிலையில், அவரது கைவண்ணத்தில் ‘ஏழு கடல் ஏழுமலை’ கேரளாவில் திரையிடப்படுவது எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

ரசிகர்கள் கொண்டாடும் உற்சாகத் திருவிழாவாக வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கேரளா உட்பட உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாகிறது.