எல்லைகளைக் கடந்த தமிழ் வீச்சு! அரேபிய மண்ணில் மலர்ந்தது ‘சிகரம் 2026’!
பாலைவன மண்ணிலும் தமிழனின் உழைப்பும் திறமையும் வெற்றிப் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருக்கின்றன! அரேபிய நாடுகளின் தொழில் மற்றும் வணிகத் துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் தமிழர்களின் சாதனைகளைப் பதிவு செய்யும் “Top 100 Tamil Leaders in Arabia – Edition 1” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூல், துபாயில் நடந்த ‘சிகரம் 2026’ விழாவில் கோலாகலமாக வெளியிடப்பட்டது.
லால்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் நூலை வெளியிட, WIT அமைப்பின் ஏற்பாட்டாளர் மெர்லின் முன்னிலையில் விஜயன் அய்யப்பன் நூலின் முதல் பிரதியை வழங்கினார்.
எச்.ஏ.பி.ஐ.பி.ஹு Merchant Habibullah (PSM Investment Group), ஹைதர் (TVS Group), கலையரசன் (Complyance), ஜாஹிர் உசேன் (Power Group) மற்றும் சரவணன் கிருஷ்ணமூர்த்தி (Lynx International) போன்ற முன்னணித் தொழில் முகங்கள் முதல் பிரதிகளைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
“100 தலைவர்கள்; 100 பயணங்கள்; ஒரே தமிழ்ப் பாரம்பரியம்!” என்ற முழக்கத்தோடு உருவெடுத்துள்ள இந்த முயற்சி, சாதனைகளைப் பட்டியலிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், நாளைய இளம் தலைமுறைக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், வலுவான பிசினஸ் நெட்வொர்க்கிங் தளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சாதனைகளின் இந்த முதல் பதிப்பைத் தொடர்ந்து, அரேபிய மண்ணில் தமிழர்களின் அடுத்தடுத்த வரலாற்றுப் பயணங்கள் உலகளவில் கம்பீரமாக அரங்கேறவுள்ளன!

