இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த வெர்டிகிள் பல்கலை வேல்ஸ்! ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த வெர்டிகிள் பல்கலை வேல்ஸ்! ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுக்க கொடிகட்டிப் பறக்கும் இந்த நேரத்தில், உயர்கல்வியிலும் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறது வேல்ஸ் பல்கலைக்கழகம். இந்தியாவின் முதல் AI-ஒருங்கிணைந்த செங்குத்து (Vertical) பல்கலைக்கழக வளாகத்தை சென்னையின் ஐடி மையமான திருவான்மியூரில் மிக பிரம்மாண்டமாகத் திறந்து வைத்திருக்கிறது!

மேடையை அலங்கரித்த சர்வதேச ஆளுமைகள்

விழாவிற்கு வேல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமை தாங்க, துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக, Zoho நிறுவனத்தின் இணை நிறுவுனரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வளாகத்தைத் திறந்து வைத்தார்!

அவருடன் சேர்த்து, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி (எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர்) மற்றும் டுபாய் Economic Group Holdings-ன் நிர்வாக இயக்குநர் திரு. எம். எப். ராவூஃப் அலி ஆகிய உலகளாவிய பிரமுகர்கள் கௌரவ விருந்தினர்களாக மேடையைச் சிறப்பித்தனர்.

அப்படி என்ன ஸ்பெஷல் இந்த கேம்பஸில்?

  • ஹைடெக் வசதிகள்: AI-இயங்கும் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், டிஜிட்டல் நூலகங்கள் மற்றும் புதுமை மையங்கள்.

  • டெக் ஜாம்பவான்களுடன் கூட்டணி: Intel Unnati, TCS iON, Microsoft மற்றும் Oracle Academy ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து Centres of Excellence அமைக்கப்பட்டுள்ளன.

  • மெகா டீல்கள் (MoU):

    • Aspin Holding Group (துபாய்): விமானக் கல்வி, சர்வதேசப் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக வேல்ஸ் கையெழுத்திட்டுள்ள மாஸ் ஒப்பந்தம்.

    • Zoho Corp: செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக விரைவில் கையெழுத்தாகவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!

பிரபலங்களின் கருத்துக்கள்!

“வேஷ்டி கட்டிய தமிழனின் தேசியப் பெருமை!”

Zoho ஸ்ரீதர் வேம்புவின் ‘Nation First’ கொள்கையையும், இந்திய ராணுவத்துடனான அவரது பங்களிப்பையும், உலக அரங்கில் தமிழ் பண்பாட்டை வேட்டியோடு உயர்த்திப் பிடிப்பதையும் டாக்டர் ஐசரி கே. கணேஷ் வெகுவாகப் பாராட்டிப் பேசினார். அத்துடன் திண்டிவனத்தில் 350 ஏக்கர் புதிய வளாகம் உள்ளிட்ட வேல்ஸின் எதிர்காலத் திட்டங்களையும் அறிவித்தார்.

“நாட்டிலேயே சொந்தமாக உருவாக்கணும்!”

மாணவர்களிடம் பேசிய ஸ்ரீதர் வேம்பு, “ஜப்பான் சென்று வந்த பிறகுதான் புரிகிறது, அடிப்படை அறிவியல் முதல் ஏரோஸ்பேஸ் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும். எதிர்காலத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் Zoho கைகோர்த்துச் செயல்படும்,” என உற்சாகப்படுத்தினார்.

“சென்னை என் செல்ல நகரம்!”

1985-ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட எமிரேட்ஸ் நிறுவனம் இன்று 250-க்கும் மேற்பட்ட விமானங்களுடன் ஆதிக்கம் செலுத்துவதைப் போல, வேல்ஸின் வளர்ச்சியும் வியக்கத்தக்கது எனப் பாராட்டிய அமீரகத் தலைவர் அஹ்மத் கூரி, சென்னை தனது இதயத்திற்கு மிக நெருக்கமான நகரம் எனக் கூறி நெகிழ வைத்தார்.

தொழில்நுட்பமும் கல்வித் திறனும் ஒன்றிணையும் இந்த புதிய செங்குத்து வளாகம், தமிழக மாணவர்களுக்கு ஒரு சர்வதேச டிஜிட்டல் கதவை திறந்து வைத்திருக்கிறது!

Related Posts