மாஸ்டருக்கு மனநோயா?
தமிழ்நாட்டில் மின்வெட்டுப் பிரச்சினை தலைதூக்கி இருக்க, மாஸ்டர் நடிகர் |ஒருவர், “சோலார் பவர் பயன்படுத்த வேண்டியதுதானே? என் வீட்டுக்கு வாங்க, நான் மின்சாரம் தர்றேன், ஆறு மாசம் கேள்வி கேக்காதீங்க” என்றெல்லாம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் பேசுகிறாரே, இந்த மனிதருக்கு மனநோயா” என்று பலரும் சமூகவலைதளத்தில் கேட்பதைப் பார்க்க முடிகிறது.
அவருக்கு மனநோய் இருக்கிறதா இல்லையா என்பது ஒருபுறம்… அவரைப் போல சிறு வயதிலேயே பிரபலமாகிவிடும் பலருக்கு மனநோய் உண்டு.
“நான் பிரபலம், என்னைச் சுற்றித்தான் உலகம் இயங்குகிறது, நான் பெரிய ஆள்” என்கிற மனநிலை (Infantile Omnipotence) இருக்கலாம்.
இதனால், ஒரு கட்டத்துக்கு மேல் சிந்தனைத்திறன் வளராது.
அதாவது, எந்த வயதில் பிரபல வெளிச்சத்தைத் தொடுகிறார்களோ, அந்த வயதிலேயே அவர்களின் அறிவாற்றல் நின்றுவிடும். உடல் வளர்ந்தாலும் சிந்தனை வளராது. வயது கூடிய பிறகும் குழந்தைத்தனமாகவே பேசுவார்கள், நடந்துகொள்வார்கள். இதை, முடக்கப்பட்ட மனவளர்ச்சி (Arrested Development) என்பார்கள்.
முக்கியமாக, சிறு வயதிலேயே பெரியவர்களுடன் பழகியதால், வயதிற்கு மீறிய தத்துவங்களையும் அறிவுரைகளையும் பேசுவார்கள். ஆனால், அந்தப் பேச்சில் அனுபவ அறிவோ, உணர்வுப்பூர்வமான ஆழமோ இருக்காது. மேலோட்டமான முதிர்ச்சி (Superficial Maturity) மட்டுமே இருக்கும். விவரம் தெரியாமல் பேசுவார்கள். இது கேட்பவர்களுக்குக் கடும் எரிச்சலைத் தரும்.
இதிலிருந்து விடுபட மனநல மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும். மருந்துகளும் தேவைப்படலாம்.
குறிப்பாக இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுவெளி வெளிச்சத்திலிருந்து குறிப்பிட்ட காலம் இவர்களை முற்றிலும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும்.
இது அவர்கள் தங்களின் நிஜமான சுயத்தைக் கண்டறியப் பெரும் உதவியாக இருக்கும். பிறருக்கும் நல்லது.
பின்குறிப்பு: சிறு வயதிலேயே பிரபலமாகிவிடும் சிலருக்கு இன்னும் ஒரு மனப் பிரச்சினை ஏற்படும். அது, சுயதம்பட்ட மனநோய் (Narcissistic Personality Disorder – NPD). அளவுக்கு அதிகமான சுயவிளம்பரம், பிறரைப் பற்றிய அக்கறையின்மை ஏற்படும். ஆகவே, பிறரை ஈர்க்கும்படி எதை வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள்.
அல்லது, தான் எதுவும் பேசாமலேயேகூட, தன்னைப் பற்றிப் பிறரைப் பேச வைக்கத் திட்டமிட்டுச் செயல்படுவார்கள்.

