மனிதநேயச் சிறகுகள்: சாதனைக் சிகரம் தொட்ட சைதை துரைசாமியின் மாணவர்கள்!
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி, சாதித்துப் படைத்த தன் மாணவர்களின் வெற்றிக் கதையை நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
லட்சியப் பாதையில் சாதனைப் பயணம்!
யு.பி.எஸ்.சி. நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்விலும், டி.என்.பி.எஸ்.சி. நடத்திய குரூப்- தேர்விலும் மனிதநேயப் பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல நூறு தமிழ் நெஞ்சங்கள் அபார வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
முதல்நிலைத் தேர்வில் வென்ற சாதனையாளர்களுக்கு, அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள ஊக்கத்தொகையுடன் கூடிய கட்டணமில்லாப் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பும் தம்பிகள், தங்கைகள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலைத் தேர்வுக்கான அடையாள அட்டை ஆகியவற்றுடன் சென்னை சி.ஐ.டி. நகரில் உள்ள மனிதநேயப் பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம் அல்லது இணையதள வாயிலாகத் தங்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
அதேபோல், டி.என்.பி.எஸ்.சி. குரூப்- தேர்வில் வென்ற தீரர்கள் பலரும் துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எனப் பல்வேறு உயரிய அரசுப் பதவிகளை அலங்கரிக்கக் காத்திருக்கின்றனர்.
உள்ளம் உருகிய உன்னத நன்றிகள்!
பயிற்சி மையத்தில் படித்து, இன்று அரசுப் பணிக்கான நியமன ஆணையைப் பெற்றுள்ள சாதனையாளர்களின் நெகிழ்ச்சியான வார்த்தைகள் இதோ:
துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ள ராஜபாளையத்துச் சபரிகிருஷ்ணன்: “தொடக்கத்தில் கிராம நிர்வாக அலுவலராக என் அரசுப் பணியைத் தொடங்கினேன். அடுத்தடுத்த உயரிய பதவிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாரானபோது, எனக்குப் பெரும் அரணாக நின்றது மனிதநேயப் பயிற்சி மையம்தான். அங்கேயே தங்கிப் படித்தேன். அதன் பயனாக குரூப்- தேர்வில் வென்று, மாநில வரி அலுவலராகப் பணியாற்றினேன். இன்று குரூப்- தேர்வில் வென்று கம்பீரமாகத் துணை ஆட்சியராக உயர்ந்திருக்கிறேன். என் வாழ்வை மாற்றிய மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!”
இதேபோல் வணிகவரித்துறை உதவி ஆணையராகத் தேர்வாகியுள்ள திருப்பூரைச் சேர்ந்த ஆனந்தகுமார், திண்டுக்கல் பிரீத்தி மற்றும் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையராகத் தேர்வாகியுள்ள தாம்பரம் கோபிநாத் ஆகியோர், “மனிதநேய மையத்தின் உன்னதப் பயிற்சியும், அய்யா சைதை துரைசாமி அவர்கள் தந்த ஊக்கமும், அள்ளிக் கொடுத்த உதவிகளுமே எங்களை இந்த உச்சிக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளன” என நெகிழ்ச்சிப் பெருக்கோடு தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.
சாதனை படைத்த அத்தனைப் பிள்ளைகளுக்கும் மனிதநேய அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி தன் வாழ்த்துகளையும் ஆசிகளையும் நெஞ்சார வழங்கினார்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிஐடி நகர் மேற்கு, சிஐடி நகர்,
சென்னை, தமிழ்நாடு 600035.

