நடிப்பில் ‘டீன்ஸ்’! படிப்பில் ‘கிங்’! மாஸ் காட்டும்   பினு டி. ஜான் போஸ்கோ!

டிப்புக்கும் நடிப்புக்கும் ‘டெட்லி காம்பினேஷன்’ அமைப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், இரண்டிலும் செஞ்சுரி அடித்து அசத்திக் கொண்டிருக்கிறார் சுட்டி ஸ்டார் பினு டி. ஜான் போஸ்கோ!

ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகிப் பாராட்டுகளைக் குவித்த ‘டீன்ஸ்’ படத்தில் ‘சர்வேஷ்’ என்ற கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியவர் இதே பினுதான். இப்போது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் அதிரடியான மதிப்பெண்களை அள்ளிக் குவித்து, வெற்றிகரமாகப் பதினொன்றாம் வகுப்பிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

வாரிசு பிளஸ் டேலண்ட்!

இவர் சும்மா வரவில்லை! ‘சுந்தர பாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களின் எடிட்டர் மற்றும் Zee5 இணையத் தொடர்களின் படத்தொகுப்பாளருமான பிஜு V டான் போஸ்கோவின் மகன் என்பதுதான் கூடுதல் ஸ்பெஷல். தந்தை திரைக்குப் பின்னால் மேஜிக் செய்ய, மகன் திரைக்கு முன்னால் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்!

திரையுலகமே குவிகிறது!

ஒரு படத்தொகுப்பாளரின் வாரிசு, படிப்பிலும் நடிப்பிலும் ‘ஆல்-ரவுண்டராக’ வலம் வருவதைப் பார்த்து கோலிவுட்டின் ஜாம்பவான்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர்.

  • இயக்குநர் பார்த்திபன்

  • ரமேஷ் கண்ணா

  • எஸ்.ஆர். பிரபாகரன்

  • யூகி சேது

  • இசை மேதை ட்ரம்ஸ் சிவமணி

  • ஸ்ரீகாந்த் தேவா

  • வடிவேல் முருகன்

  • ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்

என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தச் சிறுவனின் சாதனையைக் கொண்டாடி, மனதார வாழ்த்தி வருகின்றனர்.

வாழ்த்துக்கள் பினு! கோலிவுட்டிலும் சரி, காலேஜ் வாசலிலும் சரி… இனி உன் ஆட்டம்தான்!

Related Posts