ஸ்விக்கி, ஸொமாட்டோ-கூடுதல் விலை ஏன்?
பிரபல உணவகங்களின் பதார்த்தங்களை வீட்டிலிருந்தபடியே சுவைக்க உதவுபவை, ஸ்விக்கி, ஸொமாட்டோ, உபர் ஈட்ஸ் போன்ற ஆன்லைன் ஆப் நிறுவனங்கள்.
“ஓட்டலுக்குச் செல்வதென்றால், வீட்டிலிருந்து அனைவரும் புறப்பட்டு, வாகனத்தை நிறுத்த இடம் தேடி, ஓட்டலில் இடம் தேடி… அது ஒரு பெரிய விசயமாக இருந்தது. வீட்டிற்கே இப்போது உணவு வருவதால், அனைவருக்கும் நேரம் மற்றும் அலைச்சல் மிச்சம். தவிர, வெவ்வேறு உணவங்கங்களின் பிரபல டிஷ்களை ஒரே நேரத்தில் வரவழைத்து சாப்பிடவும் வசதி!” என்று அனைவரும் விரும்பினர்.
தவிர, இவற்றில் விலை குறைவாக இருந்தது. அதாதவது நேரடியாக ஓட்டலுக்குச் சென்று சாப்பிடுவதைவிட, இந்த சர்வீஸ்கள் மூலம் வாங்கினால், விலை குறைவு.
இது மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளித்தது. அவ்வப்போது சிறப்பு ஆபர்களும் கொடுத்தார்கள்.
ஆனால் நாளாக, நாளாக படிப்படியாக விலை உயர்ந்து இப்போது உணவகத்தைவிட இருபது முதல் முப்பது சதம் வரை விலை அதிகமாக உள்ளது என வருந்துகின்றனர் வாடிக்கையாளர்கள்.
இது குறித்து உணவக உரிமையாளர்கள் சிலரிடம் விசாரித்தோம்.
அவர்கள் கூறியதாவது:
“உணவகத்தில் ஒரு பண்டத்தின் விலை நூறு ரூபாய் என்றால், ஸ்விக்கி போன்ற நிறுவனங்களுக்கு
கமிஷன் 24 % , + ஜிஎஸ்டி 3.6 % = மொத்தம் 27.6 % உணவகம் தர வேண்டும். இதில் டெலிவரி சார்ஜ் தனி.
ஸ்விக்கி வந்த புதிதில், வாடிக்கையாளர்களுக்கு நிறைய ஆஃபர்கள் அளித்தனர். இப்போது ஒரு ரூபாய்கூட ஆஃபர் அளிப்பதில்லை. இப்போது முழுக்க முழுக்க உணவகத்தின் சார்பில் தான் ஆஃபர்கள் தரப்படுகிறது. ஆகவே விலையை கூட்டி விற்பதைத்தவிர வேறு வழியில்லை.
ஆகவே உணவகங்களுக்கு நேரில் சென்று வாங்குங்கள், சாப்பிடுங்கள் நியாயமான விலையில் கிடைக்கும்!” என்கிறார்கள்.
இதற்கிடையே ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் தங்களது கமிஷனை அதிகரித்துவிட்டதாகவும் உணவகங்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றன.
கடந்த ஆந்திர மாநிலம் விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில், கடந்த 11ம் தேதி அன்று முழுதும் ஸ்விக்கி ஆப்-ஐ லாக் – இன் செய்யப்போவதில்லை என்று போராட்டத்தை அரிவித்தன உணவகங்கள்.
ஆக அலுப்பு பார்க்காமல் நேரடியாக உணவகங்களுக்குச் சென்று சாப்பிடுவதே நல்லது!
-சோமு

