குஷ்புவால் தற்கொலை முயற்சி!

பா.ஜ.க.வில் இணைந்துள்ள  நடிகை குஷ்பு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். மனுநீதியை உதாரணம் காட்டி பேசிய திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்று குஷ்பு குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில், திருச்சி ஜெயில் பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்   அந்தோணி. பாலக்கரை பகுதியில் திடீரென தன் மீது மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டார். ‘ஒழுங்காகத் தமிழ் பேசத் தெரியாத குஷ்பு, திருமாவளவனைப் பற்றி அவதூறாகப் பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது’ என்று   ஆவேசமாக கத்திய அவர், தன் மீது தீ வைத்துக்கொள்ள முயன்றார்.

அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அந்தோணியின் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.அவரை, ஆட்டோவில் ஏற்றி பாலக்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அந்தோனி, ’என்னைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அடித்தே கொன்று விடுவீர்கள், நான் வரமாட்டேன்” என்று முரண்டு பிடித்தார். .

முழு போதையில் இருந்த அந்த நபரை தற்போது காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

-இனியன்

 

Related Posts