இஸ்லாமிய வாழ்வியலின் இதயத்துடிப்பு: ‘ஹபீபி’ காவியத்தின் நன்றிக் கவிதை!

இஸ்லாமிய வாழ்வியலின் இதயத்துடிப்பு: ‘ஹபீபி’ காவியத்தின் நன்றிக் கவிதை!

சினிமா எனும் மாயக்கண்ணாடி சில நேரங்களில் உண்மைகளை மறைத்துவிடும். ஆனால், ‘ஹபீபி’ அந்த கண்ணாடியைத் துடைத்துவிட்டு வாழ்வின் எதார்த்தத்தைப் பிரதிபலித்திருக்கிறது. இந்த வெற்றிக்குக் காரணமானவர்கள் கூடிய நன்றி தெரிவிக்கும் விழா, ஒரு கலை விருந்தாக அமைந்தது. அந்த விழாவில் ஒவ்வொருவரும் கொட்டிய முத்துக்களை இங்கே காண்போம்.

யுகபாரதி (பாடலாசிரியர்): “மீரா கதிரவனின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது. கஸ்தூரி ராஜாவை நடிகராகப் பார்த்தது பரவசம். இனி, எந்தப் படத்திலும் அப்பா கதாபாத்திரத்திற்கு இவர்தான் முதல் சாய்ஸ். இஸ்லாமிய வாழ்வியலை இத்தனை நெருக்கமாக, எந்தவித மேக்கப்பும் இல்லாமல் சொன்ன படம் இது.”

கார்த்திக் நேத்தா (பாடலாசிரியர்): “வன்முறையைத் கொண்டாடும் காலத்தில், நம்மை ஆற்றுப்படுத்தும் மருந்தாக ‘ஹபீபி’ வந்திருக்கிறது. ஏதோ ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்று எடுக்காமல், வாழ்ந்த வாழ்வை அப்படியே பதிந்திருக்கிறார் மீரா. ரசிகர்கள் இதைப் கொண்டாடும்போதுதான், இது போன்ற தரமான படங்கள் மேலும் நிறைய உருவாகும்.”

மதி (எடிட்டர்) & அப்புன்னி சாஜன் (கலை இயக்குநர்): “வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தில் பணிபுரிந்ததே பெருமை. படத்தின் வெற்றிக்குக் காரணமான இயக்குநர் மீராவுக்கும், ஒட்டுமொத்த டீமுக்கும் பெரிய சல்யூட்!”

நடிகர்கள் பட்டாளம் (அனுஸ்ரேயா, மாளவிகா, ஈசா, ஜெயஸ்ரீ, மலர், கௌஷிக், சன் சாகுல்): புதுமுகங்கள் முதல் பலரும் ஒரே குரலில் சொன்னது, “இது எங்கள் மண் சார்ந்த கதை. எங்களைப் பார்த்தாலே மக்கள் அன்போடு அடையாளம் கண்டு பேசுகிறார்கள். திரையரங்குகளில் படம் பார்த்துவிட்டு ரசிகர்களின் நெகிழ்ச்சிதான் எங்களின் மிகப்பெரிய விருது.”

சிவராமன் (சித்த மருத்துவர்): “கடையநல்லூர் வாழ்வியலை எனக்குத் தெரியும். இஸ்லாமியர்களைத் தவறாகச் சித்தரிக்கும் பிம்பத்தை இந்தப் படம் அடித்து நொறுக்கியிருக்கிறது. குடும்பத்தோடு பார்த்துவிட்டு மனம் கனத்துப்போனேன்.”

இயக்குநர் தமிழ்: “நூறு வருட தமிழ் சினிமாவில், இப்படி ஒரு இஸ்லாமிய வாழ்வியல் படம் வர இவ்வளவு காலம் ஆகிவிட்டதா? புனைவுகள் இல்லாத உண்மையான படைப்பு இது. தைரியமான முயற்சி!”ராஜூமுருகன் (இயக்குநர்): “‘மெட்ராஸ்’ படத்தை எப்படி ஒரு அடையாளமாகப் பார்க்கிறோமோ, அதுபோல இஸ்லாமிய சினிமாவிற்கு ‘ஹபீபி’ ஒரு புதிய தொடக்கம். வியாபாரம், கலை இரண்டையும் பேலன்ஸ் செய்வது கடினம், அதை மீரா சாதித்துவிட்டார்.”சுரேஷ் காமாட்சி (தயாரிப்பாளர்): “இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகக் காட்டிய பாவத்தை சினிமா போக்க வேண்டும். அதை ‘ஹபீபி’ மிகச்சரியாகச் செய்திருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட மதத்தின் படம் அல்ல, இது மனித நேயத்தின் படம்.”

கருப்பசாமி & இப்ராஹிம் (தயாரிப்பாளர்கள்): “உழைப்புக்குக் கிடைத்த வெற்றி. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், ரசித்த ரசிகர்களுக்கும் பெரிய நன்றி!”

கஸ்தூரி ராஜா (இயக்குநர் & நடிகர்): “யூசுப் கதாபாத்திரம் எனக்கு மறுபிறவி. என் மனைவி முதல், என் மகன் தனுஷ் வரை அனைவரும் படத்தைப் பாராட்டி அழுததுதான் என் வாழ்நாள் வெற்றி. மீரா எனக்குத் தந்த இந்த கௌரவமான கதாபாத்திரம், காலத்தால் அழியாது.”மீரா கதிரவன் (இயக்குநர்): “110 வருட தமிழ் சினிமாவில், இது என் முதல் படம் என்று சொல்லவே நான் ஆசைப்படுகிறேன். நெருக்கடியான காலத்தில் உதவி செய்த சுரேஷ் காமாட்சி, படத்தை முன்னெடுத்துச் சென்ற நண்பர் ராம் என அனைவருக்கும் நன்றி. இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை மாற்றியதே இந்தப் படத்தின் உண்மையான வெற்றி!”

அன்பையும், எதார்த்தத்தையும் விதைத்த ‘ஹபீபி’ படக்குழுவிற்கு, ரசிகர்களின் பாராட்டு மழை தொடர்கிறது!

Related Posts