மூன்று மாதம் எச்சரிக்கை… அலறும் மக்கள்! தப்பிக்குமா சென்னை?
சென்னை; கொரோனா பெரும் தொற்று தனது ஆட்டத்தை தொடங்கி இந்த வருடத்தின் பெரும்பாலான நாட்களை விழுங்கி விட்டது. மீது இருப்பதது சில மாதங்கள் மட்டுமே. இந்த மாதமாவது தப்பிக்குமா? அதற்கு வாய்ப்பு இல்லை’’ என்று கூறி சென்னை வாசிகளை பதர வைத்திருக்கிறது மாநகராட்சி.
கொரோனா பாதிப்பால் சென்னையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலம் தொடங்குவதால் இனி வரும் மூன்று மாதம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த கொரோனா நோய் தொற்றானது தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியிருப்பதாக மாநகராட்சி அச்சம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் சென்னையில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று படிப் படியாகுறைந்து கடந்த மாதம் வரை 10,000க்கும் கீழே இருந்த சிகிச்சை பெரும் நபர்களின் எண்ணிக்கை தற்போது 13,280-ஆக உயர்ந்துள்ளது.
அதிகம் பரவும் பகுதிகளாக அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் இருக்கிறது. தற்போது இந்த மண்டலங்களில் 1300-க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அடுத்தகட்டமாக திருவிக நகர், அடையாறு மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் தினமும் 14,000 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இங்கு பரிசோதிக்கப்பட்டு உறுதி செய்பவர்கள் விகிதம் 7 ஆக குறைந்து வந்தது. தற்போது மீண்டும் 10% ஆக உயர்ந்துள்ளது. இது பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் இதுவரைக்கும் 16லட்சம் பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இது சராசரியாக சென்னை மக்கள் தொகையில் 20% ஆகும் என தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிப்பு என்பது சென்னை வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
-யாழினி சோமு

