குழந்தைகள்  நோய் தொற்றில் இருந்து  பாதுகாப்பது எப்படி?

மழைக்காலம் என்றால் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்கிறது உடல் உபாதைகள். அதுவும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். சளி, இருமல்,காய்ச்சல், என படுத்தி எடுத்துவிடும். இப்போது கொரோனா காலம் வேறு’, இந்த சூழ்நிலையில் எப்படி நமது குழந்தைகளுக்கு  நோய் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கச் செய்வது. உடலில் எதிர்ப்பு சத்தி குறைவாக இருந்தால், நோய்த்தொற்று எளிதில் அவர்களை தாக்கும் வாய்ப்பு அதிகம்.

குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவது  சளி, காய்ச்சல், இருமல் போன்ற உடல் பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே , குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி? என்பதை பற்றி பார்க்கலாம்.

உணவு வகைகள் என்ன?

வளரும் குழந்தைகளுக்கு தினமும் அல்லது வாரத்தில் 2 நாட்களாவது கட்டாயம் கீரை கொடுக்க வேண்டும்.இந்த உணவில்  இரும்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியத்தை மேம்படுத்தி குழந்தைகளில், இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

குழந்தைகளின்உணவில் , கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற அடர் நிற காய்கறிகள், கேரட், மஞ்சள், மஞ்சள்பூசணி, பச்சை குடமிளகாய் மற்றும் பீன்ஸ், முட்டைகோஸ், காளான் போன்ற காய்கறிகள் கண்டிப்பாக  இருக்க வேண்டும். இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

பழங்கள்;

வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம், மாதுளை, கொய்யா, வைட்டமின் சி நிறைந்த பப்பாளி, நெல்லிக்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்கள் இவற்றை அதிகளவில் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும்.

பழ வகைகளில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால்  உண்டாகும் நோய் தோற்று தடுக்கப்படுகிறது.

கொட்டை வகைகள்;

பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்ற பருப்புகள் மற்றும் பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி சீராக பராமரிக்கப்படும். இந்த கொட்டை வகைகளில் தாதுக்கள், புரதம், மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

பூண்டு;
குழந்தை முதல் பெரியவர் வரை உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது பூண்டு.  இதிலுள்ள [Allicin ] அல்லிசின்  எனும் பொருள், நோய்தொற்றுகளால் ஏற்படும் காய்ச்சல், சளி போன்ற பாதிப்பு வாராமல் பாதுகாக்கிறது. மேலும் இரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது. எனவே தினமும் உணவில் பூண்டு சேர்த்து கொள்வது நல்லது.
அசைவம்;

அசைவ உணவான மீனில் புரோட்டீன் மற்றும் ஒமேகா 3′ என்ற அமிலம்  அதிகம் உள்ளது.  இது உடலில் எந்த நோயும் எளிதில் அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

மேலும் கண் பார்வை குறைபாட்டைத் தவிர்த்து, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

விட்டமின் டி;

குழந்தைகளுக்கு அவசியமான பால், முட்டை இதில் அதிகளவில் புரதங்கள் அடங்கி இருப்பதால்  திசுக்களின் வளச்சிக்கும் உடல் உறுப்புகள் வளரவும் உதவி செய்கின்றன. வேகவைத்த முட்டையில், எலும்புகள் மற்றும் பற்களின் உறுதிக்கு உதவும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இவை எல்லம் உணவுகள் மூலம் நாம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது. இதைத் தாண்டி இயற்கையாக உடலில் விட்டமின் டி கிடைக்க சூரிய ஒளி அவசியம் தேவை.

காலை, மாலை என குழந்தைகளை 1 மணி நேரம் அல்லது அரை மணி நேரமாவது வெளியில் விடவேண்டும். அப்படி செய்வதால் தோல் வழியாக உடலுக்குத் தேவையான விட்டமின் டியை எடுத்துக் கொள்ளும். எனவே சூரிய ஒளி அவசியம் கட்டாயம்.  இயற்கையோடு இணைவோம் நோய் இல்லாமல் வாழ்வோம்.’

-யாழினி சோமு

Related Posts