எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ!

செனனை; நடிகர் ராதாரவி தலைமையில் இன்று செயற்குழு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினரான மறைந்த திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களை கௌரவிக்கும் விதமாக, டப்பிங் யூனியனின் செயற்குழு 30.09.2020 இன்று தலைவர் திரு.டத்தோ ராதாரவி அவர்களின் தலைமையில் கூடியது. இதில் சில  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக செப்டம்பர் 25 ஆம் தேதி   பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்  உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர். அவரை கெளரவிக்கும் விதமாக  இன்று சென்னையில் ராதாரவி தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எஸ்.பி.பி அவர்களின் திருவுருவப் படம் திறந்துவைக்கப்பட்டது.

மேலும் டப்பிங் யூனியனுக்கென தனியே டப்பிங் ஸ்டுடியோ ஒன்று இசைத் துறைச் சாதனையாளரும் டப்பிங் கலைஞருமான எஸ்.பி.பி அவர்களின் நினைவாக விரைவில் திறக்கப்படும் என ராதாரவி தெரிவித்தார்.

-யாழினி சோமு

Related Posts