இதயம் காக்கும் சிறந்த உணவுகள்!
உலக மக்கள் தொகையில் இதய நோயாளிகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. உலகமுழுவது வருடத்தில் 17.9 பேர் இதய நோயல் உயிர் இழக்கின்றனர் என்று ஆய்வு கூறுகிறது. இந்த உயிரிழப்பு உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
ஆகவே இதயத்தை பாதுகாப்பது பற்றியும், இதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கு உலக இதயநல கழகத்தால் 2000-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி உலக இதய தினமாக அறிவிக்கப்பட்டது அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது உடல் இயக்கத்திற்கு அன்றாடம் உறங்கும் போதும் உறங்காமல் நமக்காக துடித்துக் கொண்டிருப்பது இதயம். நாம் வாழ ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பதும் இதயம்தான். அதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? நம்மை வாழவைக்கும் இதயத்தை காற்பது எப்படி விரிவாகப் பார்கலாம்.
இதயத்தை காக்கும் உணவுப் பழக்கங்கள் என்ன?
இதயத்தை பாதிக்கும் ரிபைண்டு கார்போஹைட்ரேட் எனப்படும் செயற்கை சர்க்கரைப் பொருட்களைத் தவிக்க வேண்டும். இந்த உணவு இன்சுலினையும் ட்ரைகிளிசரேட்டையும் அதிகரிக்கச் செய்து உடலில் சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகம். எனவே இதைத் தவிர்ப்பது நல்லது.
கடையில் விற்கப்படும் உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்திடுங்கள். மாதம் ஒரு நாள் அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி சாப்பிடுவது இதயத்தை பாதிக்கும்.
பாலில் ஆடையை நீக்கிவிட்டு டீ, காபி, தயிர், மோர், பனீர் எடுத்துக் கொள்ளலாம். பதப்படுத்தப் பட்ட சீஸ்,மயோனைஸ் அறவே தவிர்ப்பது சிறந்தது. முழுதானியங்கள், பருப்புகள், கோதுமை, மல்டி க்ரைன் ரொட்டி போன்றவை எடுத்துக் கொள்ளலாம்.
தினமும் உணவில் வெந்தயம், ஃபிளக்ஸ் விதைகள் மீன், கோழி போன்றவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆடு, பன்றிக்கறியில் கொழுப்பு அதிகம் என்பதால் அளவாக சாப்பிடுவது நல்லது.
ஈரல், கிட்னி, மூளை போன்ற உறுப்புகளை அதிகம் எடுத்துக் கொள்ள கூடாது. காய்கறிகள், பழங்கள், தானியங்கள் அதிகம் சாப்பிடலாம். இந்த உணவுகள் இதயத்தை பாதிக்காது.
இதயத்தை காக்கும் எண்ணெய்
எண்ணெயில் எது சிறந்தது என்பதில் எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. நல்லெண்ணெய் நல்லதா? தேங்காய் எண்ணெய் நல்லதா? ஆலிவ், கடலைஎண்ணெய் அம்மாடியோ’’, உண்மையில் எந்த எண்ணெய் தாங்க நல்லது? பொதுவாகவே எண்ணெயில் கொழுப்புச்சத்து அதிகம் உள்ளது. அதிகம் பயன்படுத்தினால் ஆபத்தை ஏற்படுத்தும் இது தான் உண்மை.
நமது உடலில் நல்ல கொழுப்பு அதிகமாகவும் கெட்ட கொழுப்பு குறைவாக இருக்க வேண்டும். நல்ல கொழுப்பு என்று சொல்லக்கூடிய ஹெச்.டி.எல் என்ற வகையை உடலுக்கு நல்லது. இப்போது உள்ள காலகட்டத்தில் எந்த எண்ணெய் சிறந்தது என்று கனிக்க முடியாத சூழல் என்றே சொல்ல வேண்டும். எனவே அளவாக பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம்.
நாம் கடையில் வாங்கும் எண்ணெயில் குருடாயில் முதல் எத்தனையோ வேதி பொருட்கள் கலக்கப்படுகின்றன. ஆகவே மரசெக்கு எண்ணெய் சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். அதிலும் கலப்படம் இருக்கும் என்று ஒருபுறம் எச்சரிக்கையும் விடுக்கின்றனர் எனவே கவனமுடன் இருப்பது நல்லது.
-யாழினி சோமு

