பாடகியுடன் ஆன்மிக உறவுதான்!: ஜெயம் ரவி விளக்கம்!

பாடகியுடன் ஆன்மிக உறவுதான்!: ஜெயம் ரவி விளக்கம்!

சாக்லேட் பாயாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான, ஜெயம் ரவி அடுத்தடுத்து அதிரடி கதாபாத்திரங்களிலும் முத்திரை பதித்தார். பேராண்மை உள்ளிட்ட படங்களில் மிக வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ராஜராஜ சோழனாக – அருள்மொழி வர்மனாக அவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து அகிலன், இறைவன், சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில் வரும் தீபாவளியை முன்னிட்டு அவர் நடிக்கும் பிரதர் திரைப்படம் வெளியாக உள்ளது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே – எந்தவொரு சர்ச்சையிலும் சிக்காத – ஜெயம் ரவி குறித்து வதந்தி பரவியது. அதாவது, அவர் தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக சட்ட நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், ‘பாடகி கெனிஷா பிரான்சிஸ் உடனான நெருக்கம்தான் இதற்கு காரணம்’ என சிலர் வதந்தி பரப்பினர்.

இந்நிலையில் ஜெயம் ரவி, “‘நான் எடுத்த விவாகரத்து முடிவு, தனக்கு தெரியாது என ஆர்த்தி சொல்வது உண்மையல்ல. ஏற்கனவே இரண்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அவர்கள் தரப்பில பேசியும் இருக்கிறார்கள். இப்படி இருந்தும் தனக்கு தெரியாது என்று அவர் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன்” என்றார்.

மேலும், “பாடகி கெனிஷா பிரான்சிஸ், இசைக் கலைஞர் மட்டுமல்ல. அவர் ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். தவிர, அவர் ஓர் ஆன்மிகவாதி. அவரோடு ஒரு ஆன்மிக மையம் ஆரம்பிக்க முடிவு செய்ததேன். இதைத் தகர்ப்பதற்காக இப்படி வதந்தியை கிளப்பி உள்ளனரா என தெரியவில்லை. இது தவறாக பேசியவர்களுக்குத்தான் அசிங்கம்” என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார் ஜெயம் ரவி.

Related Posts