கோட்: காந்தி குடிக்கலாமா? விஜயகாந்த் வர்றாரா? முப்பாட்டன் பாடலா?: வெங்கட் பிரபு அதிரடி பதில்கள்!

கோட்: காந்தி குடிக்கலாமா? விஜயகாந்த் வர்றாரா? முப்பாட்டன் பாடலா?: வெங்கட் பிரபு அதிரடி பதில்கள்!

ஏ ஜி எஸ் எண்டர்டெயிண்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரிக்ககும் திரைப்படம், தி கோட். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆவர்.

வெங்கட் பிரபு இயக்க, விஜய் நாயகனாக நடிக்கும் இப்படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந் நிலையில், சென்னை பிரசாத் ஸ்டூடியோவில், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி,ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

டிரெய்லர் திரையிடப்பட்ட பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு வெங்கட் பிரபு பதில் அளித்தார்.

அப்போது tamilankural.com சார்பில், “நாயகன் விஜய் பெயர் காந்தி என்று உள்ளது. டிரெய்லரின் அதிரடி சண்டைக் காட்சிகள் பல உள்ளன. ‘காந்தி கலவரம் செய்கிறார் என்பது தான் படத்தின் ஒன்லைனா’, ‘ காந்தி (விஜய்) மது குடிக்கும் காட்சி இருக்கிறது. அந்த பெயரை வைத்துக்கொண்டு அருந்தும் காட்சி வைக்கலாமா’, ‘படத்தில் மறைந்த விஜயகாந்த் ஏ.ஐ. உருவம் வருகிறதா’, ‘டிரெய்லரின் கடைசியில் முப்பாட்டின் முருகன் பாடலை பாடுகிறார் விஜய்..இது அரசியலா’ என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, “காந்தி என்று பெயர் வைத்தாலே மது அருந்த கூடாதா?  என் நண்பன் பெயரும் காந்தி தான். அவன் என்னென்ன செய்கிறான் தெரியுமா அதை வெளியில் சொல்ல முடியாது. அவ்வளவு கெட்டவன் அவன்.

மகாத்மா காந்தி என்றும் மகாத்மா தான். அவரை இவருடன் ஒப்பிட்டது மோசமானது.

அதேபோல் காந்தி எதற்காக கலவரம் செய்ய வேண்டும்? நான் டிரெய்லரிலேயே ஃபுல் கதையையும் சொல்லி இருக்கிறேன்.

அடுத்து விஜயகாந்த்  வருகிறாரா என்று கேட்கிறீர்கள். எல்லாமே கேட்டுவிடுங்கள். யார் யார் படத்தில் இருக்க வேண்டும்… படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ் எல்லாம் வரிசையாக கேட்டுவிடுங்கள் நாங்க சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.

முப்பாட்டன் முருகன் பாடல் வர காரணம், நான் தமிழன் என்பதால். விஜய் நடித்த  கில்லி படத்திலேயே அப்படி ஒரு பாடல் வருமே.. அப்போது ஏன் கேட்கவில்லை” என்றார்.

அதற்கு நாம், “அப்போது விஜய், கட்சி துவங்கவில்லையே” என்றோம்.

வெங்கட் பிரபு சிரித்துக்கொண்டார்.

மேலும் அவர் பேசும்போது, “படம் நன்றாக வந்திருக்கிறது. தயாரிப்பாளர்கள் பாராட்டினர். விஜயும் மகிழ்ந்தார். டிரெய்லரை பார்த்துவிட்டு அஜீத் வாழ்த்து தெரிவித்தார்” என்றும் கூறினார்.

அர்ச்சனா கல்பாத்தி பேசும்போது, “தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் கோட் வெளியாகும்” என்றார்.

இதனால் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் கோட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

 

Related Posts