விஜய்யின் ‘கோட்’:  அசத்தும் அதிரடி ட்ரெய்லர்!   

விஜய்யின் ‘கோட்’:  அசத்தும் அதிரடி ட்ரெய்லர்!   

ஏ ஜி எஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிக்க கிரியேடிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மேற்பார்வையில், வெங்கட் பிரபு இயக்க, விஜய் நாயகனாக நடிக்கும் படம், ‘தி கோட்’.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படத்தில் விஜய் கதாபாத்திரத்துக்கு காந்தி என பெயர் வைக்கப்பட் உள்ளது. . அவர் யார் என்பதை பில்டப்புடன் சொல்கிறார் பிரசாந்த். தொடர்ந்து விஜய் தொடர்பான அதிரடி, ஆக்‌ஷன் காட்சிகள் வருகின்றன.

விஜய்யின் இளம் வயது தோற்றமும் கிராபிக்ஸில் காண்பிக்கப்படுகிறது.   டிரெய்லரின் மொத்த நீளம் 2.51 நிமிடங்கள்..  அதில் 2 நிமிடங்கள் சண்டைக் காட்சிகள் இருக்கின்றன.

‘பிகில்’ படத்தில் விஜய் அப்பா என கத்துவது போல இந்தப் படத்திலும் அதே டோனில் வருகிறது.

அப்பா – மகன், ஆக்‌ஷன், காதல், நண்பர்கள், புதிய மிஷன், சென்னையில் குண்டு வெடிக்கப்போகுது போன்றவை விஜய்யின் முந்தைய படங்களைப்போலவே ஆர்வத்தை அதிகரிக்கிறது.

மோகன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வருவதை புரிந்துகொள்ள முிடகிறது.

அவர், “காந்தி வேஷம் போட்டு பாத்திருக்கேன், முதல் தடவ காந்தியே வேஷம் போட்டு பாக்கறேன்” என்கிறார்.

யுவனின் பின்னணி இசையும் அதிரடியாகஉள்ளது.  “இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது” என்ற ‘மங்காத்தா’ பட அஜித் வசனத்தை பேசுவது கவனத்தை ஈர்க்கிறது. .

மொத்தத்தில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்து உள்ளது டிரெய்லர்.

 

Related Posts