தமிழ் சினிமாவில்  புதிய வில்லனாக அறிமுகமாகிறார் தமிழ் பாரதி.!

தமிழ் சினிமாவில்  புதிய வில்லனாக அறிமுகமாகிறார் தமிழ் பாரதி.!

கழுமரம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தன் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும், யார் இவர் என்று கேட்கும் அளவிற்கு ஒரு புதிய முகம் வில்லத்தனம் செய்திருக்கிறது.
கத்தியின்றி, இரத்தமின்றி, தன் நடிப்பால் பார்ப்பவர்களை எரிச்சல் ஊட்டும் வகையில் கதாநாயகனுக்கு இடையூறு செய்யும் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருக்கிறார்.

யார் இவர் ?இதற்கு முன் இவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்ற நமது கேள்விக்கு அவரிடமே பதில் கேட்டரிந்தோம்.

அவர் பேச்சில் சுவாரசியம் தழும்பியது. சிரித்த முகத்தோடு பேசத் தொடங்கிய தமிழ் பாரதி தான் ஒரு சின்னத்திரை இயக்குநர் என்பதை பதிவு செய்தார். பைரவி, கிருஷ்ணா காட்டேஜ், காத்து கருப்பு, என் தோழி என் காதலி என் மனைவி, அம்மு, கனா காணும் காலம், அஞ்சறைப்பெட்டி, சுவை தேடி, சூரிய புத்திரி, எனப் பல்வேறு தொடர்களில் பணியாற்றிய பின், சின்னத்திரை இயக்குநர் சங்கத்தின் எலக்டட் பொருளாளராக இருந்து வருகிறார் என்பது தெரியவந்தது.

பார்ப்பதற்கு கரடு முரடனாக தோற்றமளித்தாலும் பேச்சில் தமிழ் தாண்டவம் ஆடியது.

திடீரென நடிப்புக்கு எப்படி வந்தீர்கள் என்ற நமது கேள்விக்கு? இந்தப் படத்தின் இயக்குநர் கொட்டாச்சி அன்னமகன் தன் நீண்டகால சகோதரன்.

என்னை அவர் கழுமரம் என்ற படத்தில் நடிக்கச் சொன்னார். நடிப்பெல்லாம் சூட்டு போட்டாலும் எனக்கு வராது என்று நான் சொல்ல, நீங்க நடிக்க எல்லாம் வேணாம் அண்ணா, இப்ப எப்படி என்கிட்ட பேசறீங்கலோ அப்படியே எதார்த்தமா செய்யுங்க அது போதும் என்று அவர் சொல்ல, கொடுத்த வாய்ப்பினையை பயன்படுத்திக் கொண்டதாக சொல்லி சிரித்தார்.

இறுதியில் படம் பார்த்த எங்களுக்கு நீங்கள் நடித்தது மிகவும் எதார்த்தமாகப்பட்டது, உங்களுடைய வாய்ஸ் உங்களுக்கு மிகப்பெரிய பலம்.
தொடர்ந்து நீங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.
திரை உலகில் வில்லனுக்கு மவுஸ் எப்போதும் அதிகம் என்பதை உணர்ந்து தமிழ் திரை உலகில் புதிய வில்லனாக தமிழ் பாரதி வலம் வரவேண்டும் என்று அவரை வாழ்த்தி விடை பெற்றோம்.