விடாமுயற்சி செகண்ட் லுக் ரிலீஸ்!

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி, பட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த வாரம்வெளியானது. அதில் அஜித் பையுடன், யாருமற்ற நெடுஞ்சாலையில் ஸ்டைலாக நடந்து செல்வது போல் இருந்தது.இந்நிலையில் இன்று செகண்ட் போஸ்டர்களை விடாமுயற்சி படக்குழு வெளியிட்டு உள்ளது. ஒரு போஸ்டரில் அஜித் கார் ஓட்டுவது காட்டப்பட்டு இருக்கிறது. மற்றொரு போஸ்டரில் அஜித் கையில் துப்பாக்கி உடன் இருக்கிறார். ‘முயற்சிகள் தோற்பதில்லை’ என்ற கேப்ஷனுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகின்றன.