விமர்சனம்: சிக்லெட்ஸ்
2கே கிட்ஸ் இளைஞர்களுக்கும், பெற்றோருக்கும் ஏற்படும் தலைமுறை இடைவெளியை அடல்ட் ஒன்லியாக கொடுத்து இருக்கிறார்கள்.
மூன்று இணை பிரியா தோழிகள். கல்லூரி பருவத்தை கடக்கும் இவர்களுக்கு, ‘சுதந்திர தாகம்’ எடுக்கிறது. அதாவது, பெற்றோரிடம் தகவல் சொல்லாமல் எங்காவது சென்று ‘உற்சாகமாக’ இருக்க வேண்டும் என்பது இவர்களது திட்டம். பெற்றவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, தங்களது ஆண் நண்பர்களுடன் கிளப்புக்குப் புறப்படுகிறார்கள்..
இன்னொரு புறம் இவர்களைக் காணாமல், பெற்றோர் பரிதவித்து தேடுகின்றனர்.
இளைஞர்களை பெற்றோர் கண்டு பிடித்தார்களா, என்ன நடந்தது என்பது கதை.
நயன் கரிஷ்மா, அம்ரிதா, மஞ்சிரா ஆகியோர் நாயகிகள். இந்தக் கால இளம் பெண்களை கண் முன் நிறுத்துகின்றனர். உற்சாகம், கலாட்டா என துள்ளலாக நடித்து உள்ளனர்.
நாயகன் சாத்விக் வர்மாவும் நவநாகரீக இளைஞனாக வந்து முத்திரை பதிக்கிறார். ஸ்ரீமன் சிறப்பாக நடித்து உள்ளார். தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசம், நம்பிக்கையை அப்பாவி தகப்பனாக வெளிப்படுத்துகிறார். மற்ற நடிகர்களும் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
இந்தக் கால இளைஞர்களால் பெற்றோர் படும் பாட்டை சொல்லி இருக்கிறார்கள்.
