விமர்சனம்: வடக்குப்பட்டி ராமசாமி     

விமர்சனம்: வடக்குப்பட்டி ராமசாமி     

வாழ்க்கையில் நமக்கு நல்லதே நடக்கவில்லையே என்கிற விரக்தியில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக வளர்கிறார் சந்தானம். பிறகு, அதே கடவுளை வைத்து மக்களை ஏமாற்றி பிழைக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் ஒன் லைன்.

வடக்குப்பட்டி ராமசாமியாக சந்தானம்.. சொல்ல வேண்டுமா..  தனது வழக்கமான கவுன்ட்டர் டயலாக்குகளில் கலக்குகிறார்.  தவிர, சீனுக்கு சீன் தானே வர வேண்டும் என்கிற  எண்ணம் இன்றி, நகைச்சுவை பட்டாளத்தையே உடன் வைத்து இருக்கிறார்.அதற்கு ஏற்ற மாதிரி மாறன், சேஷு,ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர் என அனைவருமே அதிரடி சிரிப்புக்கு உத்திரவாதம் அளிக்கிறார்கள்.

நாயகி மேகா ஆகாஷ்.

பொதுவாக காதலன் பின் சுற்றுவது, டூயட் பாடுவது என்பது போல அல்லாமல்.. படத்துக்கு தேவையான கதாபாத்திரம் இவருக்கு. ஊர் மக்களை நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று தவிக்கும் கதாபாத்திரம். சிறப்பாக நடித்து உள்ளார்.

 

ஊர் பெரிய மனிதர்களாக வரும் ரவி மரியா – ஜான் விஜய் ஆகியோரின் ஈகோ மோதல்.. அதைத் தொடர்ந்து அவர்கள் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அதே போல  மதுப் ப்ரியராக வரும்  சேஷுவின் ராவடி,  கண்டிப்பான ராணுவ அதிகாரியாக வந்து சிரிப்பூட்டும் நிழல்கள் ரவி என படம் முழுதும் காமெடிக்கு பஞ்சமில்லை.சிறிய கிராமம், அதை ஒட்டிய ஏரி, மலை, நதி என அனைத்தையும் சிறப்பாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தீபக். எடிட்டர் சிவாநந்தீஸ்வவரனின் எடிட்டிங் படத்துக்கு பலம். ஷான் ரோல்டனின் பின்னணி இசை சிறப்பு.

பக்தி என்கிற பெயரில் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.

 

 

 

 

 

Related Posts