குடியை விட்டால் 1 சவரன் மோதிரம் பரிசு… அறிவித்தது யார்?

குடியை விட்டால் 1 சவரன் மோதிரம் பரிசு… அறிவித்தது யார்?

மது அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை மக்களை ஆட்டிப் படைக்கும் அரக்கன். இதன் வரலாறு என்று பார்த்தால் நீண்டு நெடுந்தூரம் பின்னோக்கி செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கை கட்டுப்படுத்துவதற்கு எத்தனையோ கடுமையான சட்டங்களை எல்லாம் போட்டார்.

இதன் வரலாறு பற்றி சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிர்ந்திருந்தார். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமர்ந்த போது  குடித்தவர்கள் கடும் தண்டனைக்கு ஆளானார்கள். பர்மிட் முறை இறுக்கப்பட்டது. போலீஸ் கெடுபிடி அதிகமானது. ஆனால், கள்ளச்சாராய வியாபாரம் மட்டும் ஓகோவென்று ஓடியது.

இறுதியாக எம்.ஜி.ஆர் ஒரு கடுமையான நடவடிக்கை எடுத்தார். மது அருந்தி ஒருவர் கைது செய்யப்பட்டால், முதல் முறை என்றால் அவருக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை. இரண்டாவது முறை என்றால்  அதே நபர் மது அருந்தி கைது செய்யப்பட்டால், அவருக்கு 3 வருட சிறை தண்டனை. அதே நபர் 3 முறை மது அருந்தினால் நாடு கடத்தல் என்று ஒரு கடுமையான சட்டத்தை இந்தியாவில் அல்ல உலகத்தில் முதன் முதலாக என் தலைவன் கொண்டு வந்தார்.

இந்த சட்டம் அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தையும்,மாற்றத்தை கொண்டு வந்தது. அவர் அறிவித்த மதுவிலக்கு தோல்வி அடைந்து சதியால் ஆட்சி கலைக்கப்பட்டது. மறுநாள் காலை 6 மணிக்கு நான் ராமாவரம் தோட்டத்துக்கு போனேன். போனவுடன் என்னோடு 6 மணிக்கு இண்டர்காம் தொலைபேசியில் பேசினார்.

‘’டேய் என்ன காலையிலேயே வந்திருக்க. என்ன விஷயம் என்று கேட்டார். ’’அண்ணே… அப்படியே ஓ என்று அழுதுவிட்டேன் அதை எப்படி சொல்றது தெரியல. அப்படி ஒரு சோகம்…ஆவேசம்.. அப்படியொரு கடுமையான துக்கத்தில் இருந்தேன்.

அண்ணே எது செஞ்சாலும் உங்ககிட்டே கேட்காம செய்யக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட்டிருக்கீங்க… இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு  செய்தி வரும். நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டேன். உடனே அலறி அடித்து கொண்டு எல்லோரும் ஓடி வந்து இழுத்துட்டு போய் தலைவர் இடத்தில் பேச விட்டார்கள்.

தலைவர் என்னை அழைத்து நீ என்னுடைய நம்பிக்கைக்குரியவன், உண்மையான தொண்டன்னா நான் சொல்றதை நீ கேட்பாய் என்று நம்புகிறேன். அமைதியா போகணும் எந்த விதமான சின்ன கிளர்ச்சி கூட செய்யக் கூடாது அப்படின்னு சொன்னார். ஒரு மனிதநேயமிக்க ஒரு முதலமைச்சராக இருந்தார் என் தலைவர். ஆனால் இந்த திட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு மிகுந்த வேதனைக்கு உள்ளானார்.

தலைவர் என்னை அழைத்து ‘ நீ மதுவிலக்கு கொள்கையை எதிர்த்து பிரச்சார செய் என்றார்.

அதற்குப் பிறகுதான் நான் எல்லா பொது நிகழ்ச்சிகளிலும், பொதுக்கூட்டங்களில் குடிப்பழக்கத்தை நிராகரிக்கச் சொன்னேன். அதனுடைய தீமைகளைச் சொல்லி, எல்லோரையும் ஈர்க்கும் படி கவர்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டேன்.

மதுபானம் அருந்தி கொண்டு வருகின்ற ஒருவர் டே ஒன்றிலிருந்து அதாவது இன்றைய தினத்திலிருந்து  நான் குடிக்க மாட்டேன். என்று குடியைவிட்டு விட்டு இந்த ஒரு வருடத்தில் ஒரு நாள் கூட நான் ஹால்கஹால் அருந்தவில்லை. என்று மருத்துவ சான்றிதழ் சமர்பித்தால், அவருக்கு ஒரு சவரன் மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று நான் அறிவித்தேன். ஒரு 59 பேர் என்னிடத்தில் மோதிரம் பரிசு வாங்கி இருக்காங்க என்றார் மனித நேயம் மிக்க சைதையார்.

– யாழினி சோமு

Related Posts