நிஜ ஹீரோ சூரி!

நிஜ ஹீரோ சூரி!
தனது மாமன் படம் வெற்றி பெற தனது ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டதை நடிகர் சூரி கண்டித்து இருக்கிறார்.
1997ல் ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் இருந்தே, ‘மற்றும் பலராக’ திரைப்படங்களில் வந்தவர்தான் சூரி.
2009ம் வரும் வெளியான வெண்ணிலா கபடி குழு படம்தான், “புரோட்டா சூரி” என்ற பெயரை பெற்றுத்தந்து, காமெடியனாக அடையாளம் காட்டியது.
அதிலிருந்து கணக்கு பார்த்தால், 14 வருடங்கள் நகைச்சவை கதாபாத்திரங்களில் நடித்தார்.
2023ல் வெளியான விடுதலை.. அதைத் தொடர்நது வெளியான கொட்டுக்காளி, கருடன் ஆகியவற்றில் கதை நாயகனாக நடித்தார்.
அடுத்து அவர் நடிக்கும் மண்ணாடி படத்தின் துவக்க விழாவில், “சம்பாரித்த பணம் போதும்! இனி நல்ல படங்களைத் தேர்வு செய்து நடிக்கப் போகிறேன்..” என்று பேசினார்.
அதை, நேற்று வெளியான”மாமன்” திரைப்படமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
உறவுகளின் உன்னதத்தை – மனிதர்களின் உணர்வுகளை சிறப்பாக பிரதிபலித்துள்ள திரைப்படம். கதையும் சூரிதான்.
இன்னொரு விசயத்தையும் சொல்ல வேண்டும். இந்தப் படம் வெற்றி அடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் சிலர் மதுரையில் மண்சோறு சாப்பிட்டு இருக்கிறார்கள்.
அதை கடுமையாகக் கண்டித்து இருக்கிறார் சூரி.
“படம் நல்லா இருந்தா ஓடப்போகுது. மண் சோறு சாப்பிட்டால், எப்படிப்பட்ட படமும் ஓடி விடுமா.. உங்களை என் தம்பிகள் – ரசிகர்கள் என சொல்லவே தகுதி இல்லை” என்று காட்டமாகவே சொல்லி இருக்கிறார்.
சூரியைவிட அதிகமான வருடங்கள் திரைத்துறையி்ல் இருந்து – அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் மாஸ் கீரோக்கள், கமர்சியல் என்கிற பெயரில் கண்றாவி படங்களை கொடுத்து பல நூறு கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்கள். தன் ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டால் என்ன.. மண்ணையே உண்டால்தான் என்ன… படத்துக்கு விளம்பரம் கிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள்.
ஆனால் சூரி, அவர்களிடமிருந்து மாறுபட்டு நிஜ ஹீரோவாக இருக்கிறார்..
அவரது கலை ஆர்வமும் மனிதாபிமானமும் பாராட்டுக்குரியன!
– டி.வி.சோமு  

Related Posts