த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், அயோத்திதாசர் சிலைக்கு மரியாதை!

த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த், அயோத்திதாசர் சிலைக்கு மரியாதை!

திராவிட போராளி பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாளை ஒட்டி, அவரது சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

இது குறித்து, த.வெ.க. சார்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை:

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழக பொதுச்செயலாளர் ஆனந்த்,  திராவிட பேரொளி பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்சென்னை வடக்கு மாவட்ட நிர்வாகி திரு. அப்புனு, தென் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகி திரு. தாமு மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.”

Related Posts