இங்க நான்தான் கிங்கு: விமர்சனம்  

இங்க நான்தான் கிங்கு: விமர்சனம்  

யாருமற்ற அநாதையான சந்தானம் தனக்கு திருமணத்துக்கு பெண் பார்க்கிறார்.  சொந்தமாக வீடு இருந்தால் பெண் கிடைக்கும் என்பதால்,  ரூ.25 லட்சம் கடன் வாங்கி வீடு வாங்குகிறார். வசதியான பெண்ணை திருமணம் செய்து அந்த கடனை அடைத்துவிடலாம் என நினைக்கிறார்.

ஆனால் நடந்ததோ வேறு.

இதற்கிடையே,  சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டுகிறார்கள்.

இரண்டு கதைகளும் ஓரிடத்தில் ஒன்று சேர்கின்றன. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை அதகள காமெடியாக சொல்லி இருக்கிறார்கள்.சந்தானம் வழக்கமான தனது நக்கல், நையாண்டியுடன் ரசிக்கவைக்கிறார்.

ஹீரோயின் பிரயாலயாவுக்கு சிறப்பான கதாபாத்திரம். அதை உணர்ந்து நடித்து உள்ளார்.

மேலும் தம்பி ராமையா, முனீஸ்காந்த், பால சரவணன், மனோபாலா, ஷேசு, மாறன், விவேக் பிரசன்னா என  காமெடி பட்டாளமே இருக்கிறது.

டி.இமானின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கவைக்கின்றன.எழிச்சூர் அரவிந்தன் கதை எழுதி, ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களை நகைச்சுவையால் மூழ்கடிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் இப்படத்தை எடுத்துள்ளனர்.

ஒன் லைன் நகைச்சுவைகள், கலகலப்பான நகைச்சுவைக் காட்சிகள், சரவெடி காமெடிகள் என படம் முழுக்க ரசித்துப் பார்க்கும்படி உள்ளது.

Related Posts