ஜீப்ரா : திரை விமர்சனம்
வங்கி ஒன்றில் ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிகிறார் நாயகன் சத்யதேவ். அவரது காதலி பிரியா பவானி சங்கர் வேறு ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார்.
நாயகி, ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு லட்ச ரூபாயை அனுப்புவதற்கு பதில் வேறு ஒருவருக்கு தவறுதலாக அனுப்பி விடுகிறார்.
இதனால் பரிதவிக்கும் நாயகியை காப்பாற்ற களத்தில் இறங்குகிறார் சத்யதேவ். தனது கிரிமினல் மூளையை பயன்படுத்தி பலவித தகிடுதித்தங்கள் செய்து, அந்த பணப் பிரிச்சினையை சரி செய்கிறார்.ஆனால் இதனால் வேறு ஒரு பெரிய பண பிரச்சனை பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து மீண்டரா என்பதுதான் கதை.
நாயகன் சத்யதேவ் இயல்பான நடிப்பை அளித்து இருக்கிறார். காதலிக்கு பிரச்சினை என்றவுடன் பதறுவது, அதை சரிசெய்ய துடிப்பது, வில்லனிடம் சிக்கித் தவிப்பது என்று சிறப்பாக நடித்து இருக்கிறார்.
கன்னட நடிகர் தாலி தனஞ்செயா வில்லனாக வருகிறார். ஆனால் போகப்போக அவரும் இன்னொரு நாயகன் ஆகி விடுகிறார்.வழக்கமான நாயகியாக அறிமுகமாகும் பிரியா பவானி சங்கர், அடுத்தடுத்த காட்சிகளில் முக்கியத்துவம் பெறுகிறார்.
படத்தின் நகைச்சுவை பகுதியை சிறப்பாக ஆக்கி இருக்கிறார் நடிகர் சத்யா அக்காலா. இவர் வரும் காட்சிகள் எல்லாம் திரையரங்கில் சிரிப்பலை.
சத்யராஜ் வழக்கம்போல அசத்தலான நடிப்பு.
இன்னொரு வில்லனாக வரும் சுனில்தான் எரிச்சலூட்டுகிறார்.ரவி பஸ்ருர் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு. சத்யா பொன்மார் ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.மக்களுக்கு பெரிய அளவில் பரிச்சயம் இல்லாத, வங்கி பணிகள் குறித்த கதை. ஆனால், வங்கிகளில் பண பரிமாற்றம் குறித்த செயல்பாடுகள் எப்படி இருக்கும்ஒரு வங்கி இயங்கும் முறை… எந்தெந்த துறைகள் உள்ளன.. அதில் எப்படி பணிபுகிறார்கள் என்பதையெல்லாம் சுவாரஸ்யம் குறையாமல் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறார்கள்.
இதனால் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் குழப்பம் ஏற்படாமல் படத்தை ரசிக்க வைத்து விடுகிறார்
இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக்.