யோகிபாபு நடிக்கும் ’தூக்குதுரை’டிச. 25 –ம் தேதி வெளியீடு!!
![யோகிபாபு நடிக்கும் ’தூக்குதுரை’டிச. 25 –ம் தேதி வெளியீடு!!](https://tamilankural.com/wp-content/uploads/2024/01/1-3.png)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு தற்போது ‘ட்ரிப்’ படத்தை இயக்கிய இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் ‘தூக்குதுரை’ திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இனியா கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன்,சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மூன்று விதமான காலங்களில் நடைபெறும் நிகழ்வை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசை மனோஜ், இந்த படத்துக்கு ரவிவர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் டிச. 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.