வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?

கவல் தொடர்பு இல்லாத அந்தக்காலத்தில், திருமணத் தரகர்களோ, மாப்பிள்ளை – பெண் தேவை என்பதற்காக  இணையதளமோ, கல் யாண விளம்பரங்கள் இல்லாத காலம்.  எந்த வீட்டில் பெண் அல்லது  மாப்பிள்ளை திருமணத்துக்குத் தயாராக இருக்கிறார்களோ, அந்த வீட்டின் வாசலில் மட்டும் கோலத்தின் மேல் பூசணிப் பூ வைப்பது வழக்கம். ஒட்டு மொத்தமாக எல்லா வீடுகளிலும் வைக்க மாட்டார்கள்.

தைக்கு முந்தைய மாதமான மார்கழி மாத அதிகாலை எழுந்து திருமணமாகத பெண்கள் வாசலில் கோலம் இட்டு அதன் நடுவில் பூ வைப்பார்கள். காலையில் வீதியில் பஜனைக்கு வருபவர்களின் பார்வையில் இந்தப் பூக்கள் தென்படும். இந்த வீட்டில் திருமணமாகத பெண் இருக்கிறது என்ற விவரத்தைப் புரிந்து கொல்வார்கள். தை மாதம் பிறந்த உடன் திருமணம் ஆகாத மாப்பிள்ளை இருந்தால்  பேசி, கல்யாணத்தை முடிப்பார்கள்.

 வாசலில் வைக்கும் பூவே அந்தகாலகட்டத்தில் மிக பெரிய தகவல் தொடர்பாக இருந்தது. இதன் காரணமாகவே மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தில் பூக்களை வைத்தார்கள்.