கமலை கலங்க வைத்த நபர் யார்?
தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களின் வீடுகளில் பாதுகாப்பு கருதி மாநகராட்சி சார்பில் உள்ளே நுழையக்கூடாது’’ என்ற வாசகங்கள் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் கொரோனா ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில், கொரோனாவில் இருந்து எங்களையையும், சென்னையையும் பாதுகாக்க எங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று எழுதப்பட்டு கமல்ஹாசனின் பெயர் மற்றும் முகவரியுடன் ஒட்டப்பட்டது.
வழக்கமாக வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஒட்டப்படும் ‘கொரோனா எச்சரிக்கை ஸ்டிக்கர் இது இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இருந்தும் , கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விளக்கிய மாநகராட்சி அதிகாரிகள் அவர் வெளிநாடு சென்று வந்தது உன்மை. ஆனால் அவர் சமீபமாக ஒரு மாததிற்கு மேல் எங்கும் செல்லவில்லை பாஸ்போர்ட் அடிப்படையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
அப்படி யாரும் இல்லை என தகவல் வந்ததும் நோட்டீசை அப்புறப்படுத்தியதாக தெரிவித்தார்.
அவர் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தவே இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டதா? யார் ஒட்டச் சொன்னார்கள் அந்த நபர் யார் என விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.