பொங்கல் வைக்க சரியான நேரம் எது?

பொங்கல் பானை வைக்கும் நேரமும் பொங்கும் நேரமும் நல்ல நேரமாக  இருப்பது அவசியம்.. எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என பார்த்து வைப்பது நல்லது.

நாளை தைத் திருநாள். வருடம்  முழுவதும் நமக்கு உணவும் உடலுக்கு சக்தியை  வழங்கும் சூரியபகவானுக்கு  நன்றி கூறும் வகையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

தை மாதத்தின் முதல் நாளில்தான்  சூரியன் தனது வடதிசை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார்.  

தை ஒன்று முதல் அடுத்த  வரக்கூடிய ஆறுமாதங்கள்  உத்தராயண மாதம் என அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தின் முதல் நாளே  திருவிழாவாகக் கொண்டாடுவது  நமது மரபு.

பூமியில் நாம் உயிர் வாழச்செய்யும் சூரியனை’’ கடவுளாக நினைத்து வழிபடும் நாள் இந்த பொங்கல். அப்படிப்பட்ட இறைவனை பொங்கல் வைத்து வணங்கும் இந்த திருநாளில் நல்ல நேரத்தில் பொங்கள் வைக்க வேண்டும்.

“நாளை தை  மாதப்பிறப்பு இந்த நாள் முழுவதுமே அமிர்தயோகம் இருக்கிறது. மேலும், நாளை மாலை 4.30 வரை பஞ்சமி திதியும் பின்பு சஷ்டி திதியும் உள்ளது. இந்த நாளில், அதிகாலையில் 6 மணி முதல் 7 மணிக்குள்ளும், காலை 9 மணி முதல் 10.30மணிக்குள்ளும், நண்பகல் 1.30 மணி முதல் 2 மணிக்குள்ளும் பொங்கல்வைத்து வணங்கலாம்.