ரஜினிகாந்த் பாராட்டிய நடிகர்…!
‘8 தோட்டாக்கள்’ மூலம் நாயகனாக அறிமுகமானவர் வெற்றி. அந்த படத்தின் மூலம் அனைவரின் பாராட்டைப் பெற்று, ‘ஜீவி’ படத்தில் சிறந்த நடிகன் என்ற அந்தஸ்த்தைப் பெற்றவர். தற்போது 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
‘கேர் ஆஃப் காதல்’, இப்படம் ‘கேர் ஆப் கச்சிராப்பலம்’ என்ற
தெலுங்கு படத்தின் மறு உருவாக்கம். இப்படத்தை ஹேமம் பார் இயக்குகிறார். காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ‘இறுதிச்சுற்று’ படத்தில் நாயகிக்கு அக்காவாக நடித்த மும்தாஜ் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் கதாபாத்திரத்தின் பெயர் ‘தாடி’. பிப்ரவரி மாதத்தில் வெளியாக உள்ளது.
நடிகர் வெற்றி கூறியாதாவது” 8 தோட்டாக்கள்’ பார்த்து ரஜினிகாந்த் பாராட்டினார். ‘ஜீவி’ பார்த்து விவேக் பாராட்டினார். இரண்டுமே மறக்க முடியாத பாராட்டுக்கள்.
எனக்கு ரோல் மாடல் என்று யாருமில்லை. எனக்குள்ள திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நடித்து வருகிறேன்.
இவ்வாறு தான் நடித்து வரும் படங்களைப் பற்றி நடிகர் வெற்றி பகிர்ந்துக் கொண்டார்.