கொரோனா… எடப்பாடி சொன்னது சரி!: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
“கொரோன் எப்போது ஒழியும்!” என்று ஒட்டுமொத்த உலகமும் கவலையோடு காத்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், “ஒருவர் மூலம் ஒருவர் பரவ வாய்ப்பு உள்ளதால், ஊரடங்கை அமல்படுத்தினால், கொரோனா பரவலை தடுக்கலாம்!” என்று ஆய்வாளர்களும், மருத்துவர்களும் கூறினர். இதை ஏற்று, உலகம் முழுதும் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும், ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும், ஊரடங்கு கடுமையாக பின்பற்றப் படுகிறது.
இந்த நிலையில், “வீட்டுக்குள்ளேயே இருக்காமல், வெளியில் வந்தால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்!” என்று புதிய ஆய்வு ஒன்று சொல்லி, அதிரவைத்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக் கழகம், கொரோனா பரவல் குறித்து நடத்திய ஆய்வில், “90 % கொரோனா வைரஸ் கோடைகாலத்தில் ஆறு நிமிடத்திலும், குளிர்கால வெளிச்சத்தில் 19 நிமிடத்தில் அழிக்கப்படுகிறது! ஏனென்றால், சூரிய வெளிச்சத்தில் இருக்கும் வைட்டமின் டி இயற்கையாகவே, நமக்கு கிடைக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்தால், இந்த வைட்டமினை மக்கள் இழந்து, எதிர்ப்பு சக்தியை இழக்கிறார்கள் ” என இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
ஆக, வீட்டில் இருந்தாலே கொரோனா பரவலை தடுக்கலாம் என்றார்கள், இப்போது, வெளியே வாருங்கள் கொரோனா ஒழியும் என்கிறார்கள்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதுபோல, கொரோனா பரவல் எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் போலும்!
எஸ்.யாழினி