அன்னதானம் பற்றி சத்குரு அவர்கள் கூறியுள்ளது என்ன?
நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும்” என்று புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார்.
உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நாம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் உடலைக் கூர்ந்து கவனித்தால், அது எந்தவிதமான உணர்ச்சியில் மகிழ்ச்சி கொள்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள் என்றார்.