இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் வெப் சீரிஸ்!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் டிஸ்னி +ஹாட்ஸ்டாருக்காக ‘ட்ரிபுள்ஸ்’ என்ற நகைச்சுவை சீரிஸை தயாரித்துள்ளார். இதில் நடிகர் ஜெய், வாணி போஜன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது ட்ரிப்பிள்ஸ்(Triples) வெப் சீரிஸின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
இந்த வெப்சீரிஸ் ஹாட்ஸ்டார் விஐபி-யில் வெளியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சீரிஸை கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். மொத்தம் எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த வெப்சீரிஸைக் கார்த்திக் சுப்புராஜின் இணை இயக்குனர் சாருகேஷ் சேகர் இயக்கியுள்ளார்.
இந்த சீரிஸ் இந்த மாதம் டிசம்பர் 11-ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாவுள்ளதாக அதிகாரப்பூவ அறிவித்துள்ளனர். மூன்று நண்பர்களின் காமெடி கலாட்டாவாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. மூனு ஃபிரண்ட்ஸ்… ரெண்டு கல்யாணம்… ஒரே குழப்பம் என்றவாறு முழு ரோம்காம் சீரிஸாக உருவாகியிருக்கிறது.
இந்த சீரிஸில் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கின்றனர். இந்த ‘ட்ரிபிள்ஸ்’ சீரிஸ், தமிழ், இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் வெளியாகிறது.
ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த பென்குயின் திரைப்படம் படம் அமேசான் ப்ரைமில் வெளியானது குறிப்பிடதக்கது.
-யாழினி சோமு