” ‘வெப்பன்’ திரைப்படம் வெறும் ஆக்‌ஷன் த்ரில்லர் மட்டுமல்ல..!”:  தன்யா ஹோப்!

” ‘வெப்பன்’ திரைப்படம் வெறும் ஆக்‌ஷன் த்ரில்லர் மட்டுமல்ல..!”:  தன்யா ஹோப்!

நடிகை தன்யா ஹோப் அனைத்துத் தரப்பு பார்வையாளர்களாலும் விரும்பப்படும் நடிகையாக தமிழ் சினிமாவில் உள்ளார். குறுகிய காலத்தில், பலதரப்பட்ட கேரக்டர்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார் தான்யா. இப்போது, குகன் சென்னியப்பன் இயக்கத்தில் ஜூன் 7, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளிவரத் தயாராக உள்ள ’வெப்பன்’ படத்திலும் அவர் வலுவான கதாபாத்திரத்தைப் பெற்றிருக்கிறார்.

“குகன் சார் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது நடிகர்கள் சத்யராஜ் சார், ராஜீவ் மேனன் சார், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதுதான். இதுவரை நான் நடித்தப் படங்களில் இருந்து இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் செய்யாத வித்தியாசமான ஒன்று. என்னுடையது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த எல்லோருடைய கதாபாத்திரங்களுமே வலுவானதாக இருக்கும். ஜூன் 7ம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்வையாளர்களுடன் பார்க்க ஆவலாக உள்ளேன்” என்றார்.மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார். சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல். மற்றும் ஆக்‌ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார். ‘வெப்பன்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

Related Posts