“அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!”: சத்யராஜ் உறுதி!

“அற்புதமான சினிமா அனுபவத்தை கொடுக்கும் ‘வெப்பன்’ திரைப்படம்!”: சத்யராஜ் உறுதி!

’வெப்பன்’ திரைப்படத்தின் அசரடிக்கும் விஷூவல் மற்றும் டிரைய்லர் காட்சிகள் திரையுலகினர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஹ்யூமன்’ எலிமென்ட்டை அடிப்படையாகக் கொண்ட அறிவியல் புனைக்கதை ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் ஜூன் 7, 2024 அன்று வெளியாகிறது. இதில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “படம் உருவாக்குவதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரின் நோக்கமும் ஒன்றாக இருந்தால் படத்தின் வெற்றி என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ’வெப்பன்’ படத்தில் நான் கற்றுக் கொண்டது இதுதான். படக்குழுவினர் அனைவரும் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த சூழல் எனக்கு நேர்மறையாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை, திரைப்படத் துறையின் தரத்தை உயர்த்த விரும்பும் தயாரிப்பாளர்கள் கிடைப்பது தமிழ் சினிமாவிற்கு கிடைத்த வரம். மில்லியன் ஸ்டுடியோவின் எம்.எஸ்.மஞ்சூர், எம்.எஸ்.அப்துல் காதர் மற்றும் எம்.எஸ்.அஜீஷ் ஆகியோர் ‘வெப்பன்’ படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியுள்ளனர்.குகன் சென்னியப்பன் இயக்குநராகத் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு அவர் இன்னும் உயரத்திற்கு செல்வார் என்று நான் மிகவும் நம்புகிறேன். அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் ’வெப்பன்’ திரைப்படம் பிடித்தமானதாக இருக்கும். பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை பரிசளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. திரையில் படம் பார்க்கும்போது பார்வையாளர்கள் நிச்சயம் அந்த மேஜிக்கை உணர்வார்கள்” என்றார்.

’வெப்பன்’ திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் மில்லியன் ஸ்டுடியோ படத்தைத் தயாரித்துள்ளது. சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வெப்பன்’ படத்தில் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தான்யா ஹோப், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபி கிருஷ்ணா எடிட்டிங், கலை இயக்குநர் சுபேந்தர் பி.எல். மற்றும் ஆக்‌ஷன் சுதேஷ் கையாண்டுள்ளார்.

Related Posts