ஒரு ரயிலே திருடு போனதா?
திருச்சி முதல் சென்னை எழும்பூர் வரை செயல் படுகிறது மலைக்கோட்டை ரயில். தற்போது அந்த ரயில் பெட்டிகள் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. வடமாநிலங்களுக்கு சென்ற மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மாயமானதால் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது மலைக்கோட்டை பெட்டிகள் காணவில்லை என்ற செய்தி தவறானது என்று கூறியுள்ளனர். பாண்டியன், சோழன் பெட்டிகளே இடைப்பட்ட நேரத்தில் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயங்கும். மேலும் இது மொத்தம் 4 ரேக். ஒரு ரேக் என்பது 23 பெட்டிகள் கொண்டது.
இந்த நான்கு ரேக்களும் மொத்தமாக கிளம்பாது. மதுரையில் ஒரு ரேக் பாண்டியன் என்ற பெயரில் கிளம்பும், சென்னையில் ஒரு பாண்டியன் கிளம்பும் சோழன் திருச்சியிலிருந்து ஒரு ரேக்கும், சென்னையில் இருந்து ஒரு சோழன் ரேக்கும் கிளம்பும். கடைசியில் இது மாலை 5 மணிக்கு வந்து சேரும். இது சோழன் மலைக்கோட்டை ரயிலாக இரவு 10.30 மணிக்கு கிளம்பும். அந்த 10:30க்கு கிளம்பக்கூடிய மலைக்கோட்டை ரயில் தற்போது இயக்க படவில்லை. இதுதான் உண்மை.
இந்த இயங்காத ரயிலை தற்போது காணவில்லை என்று தவறான செய்தியை பரப்புகிறார்கள். இந்த கொரோன காலத்தில் தொற்று பரவ கூடாது என்பதற்காக தூய்மை செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டு உள்ளது. இது முழுக்க முழுக்க மதுரை கோட்டத்தின் பராமரிப்பு பெட்டிகள் தான். எனவே மலைக்கோட்டை ரயிலை காணவில்லை என்பது முற்றிலும் தவறான செய்தி என கூறியுள்ளார்.
-யாழினி சோமு

