எச்சரிக்கும் வானிலை…நடுங்கும் நீலகிரி
சென்னை; நீலகிரி சுற்று வட்டாரப்பகுதியில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 10தேதி வரை கொட்டித்தீர்த்த மழையின் அளவு 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாகும். இந்த கனமழையால் பல பகுதிகள் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மின்கம்பங்களும், மரங்களுக்கும் முறிந்து விழுந்து போக்கு வரத்து முற்றிலும் பாதிப்படைந்தது. அந்த பகுதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் சென்னை வானிலை மையம் அங்கு மீண்டும் மிகக் கடின மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தென்மேற்குப் பருவமழையானது கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. அது படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் கனமழையாக் கொட்டித்தீர்த்தது. தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த மழையால் ஆறுகள், அணைகள் அனைத்து நிறம்பியுள்ளன. இதன் காரணமாக அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இதுவரை கொட்டிய கனமழையால் நீலகிரி மாவட்டமான பந்தலூர், கூடலூர், அவலாஞ்சி போன்ற பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாள்களாக இங்கு சற்று குறைந்திருக்கும் மழை. மீண்டும் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட் 12 இன்று வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுச்சேரி, காரைக்கால், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேலூர் ,சேலம் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களிலும் லேசான முதல் சாரல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மீண்டும் கனமழை மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகர்புரத்தில் ஒரு சில இடங்களிள் மழை பொய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 12ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவா ,மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் எனவும் அதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
யாழினி சோமு