எச்சரிக்கும் மின்சார வாரியம்…இருளில் மூழ்கும் இலங்கை..!
கொழும்பு: இலங்கையில் சில நாட்களாக மின்தடை அதிக நேரம் ஏற்படுவதால் பெரும்பாலான வேலைகள் பாதிக்கபடுகிறது. கடந்த திங்கள்கிழமை அன்று சுமார் 10 மணிநேரம் மின்சார தடை ஏற்பட்டது. இலங்கையில் பெரும்பாலான இடங்கள் இருள் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதுபோன்று மின்தடை மீண்டும் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவருவதாக இலங்கை மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. இலங்கையில் கெரவலபிட்டி என்ற இடத்தில் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தில் மதியம் பழுது ஏற்பட்டதால் இலங்கை முழுவதும் மின்சாரம் தடைசெய்யப்பட்டது.
நகர்புறத்தில் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கியதால் சிக்னல்கள் இயங்கவில்லை. சுமார் 10 மணிநேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். இலங்கையில் இதே போன்று 2016-ம் ஆண்டு மிகப் பெரிய மின்தடையை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்த மின்தடை நுரைச்சோலை மின்நிலையத்தையும் பாதிக்கச் செய்தது. ஆகவே மீண்டும் இலங்கையில் மிகப் பெரும் மின்தடையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என இலங்கை மின்சாரவாரியம் எச்சரித்துள்ளது.
யாழினி சோமு