விஜய் ஸ்ரீஜி இயக்கத்தில் அடுத்து ‘மகேஸ்வரா’!
பிரபல இயக்குநர் விஜய் ஸ்ரீஜி, அடுத்ததாக மகேஸ்வரா என்கிற படத்தை இயக்குவதாக போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்து உள்ளது.
‘தாதா 87’ படத்தின் மூலம், தமிழ்த் திரையுலகில் தடம் பதித்தவர் இயக்குநர் விஜய் ஸ்ரீஜி. இப்படத்தில் 87 வயதான சாருஹாசனை நாயகனாக்கினார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிக அதிக வயதான நாயகன் என்கிற பெருமையை சாருஹாசன் பெற்றார். தொடர்ந்து விஜய் ஸ்ரீஜி, பவுடர் உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
சமீபத்தில் வெள்ளி விழா நாயகன் என்று ஒரு காலத்தில் பிரபலமான – இடையில் திரையுலகைவிட்டு ஒதுங்கி இருந்த – மைக் மோகனை, நாயகனாக்கினார். படத்தில் அனைவரும் சட்டம் தெரிந்திருக்க வேண்டும், பள்ளியில் சட்டத்தை ஒரு பாடமாக வைக்க வேண்டும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் போன்ற புரட்சிகர கருத்துக்களை தெரிவித்து இருந்தார் விஜய் ஸ்ரீஜி.
இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த மோகன், தற்போது, விஜயின் கோட் படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அடுத்ததாக விஜய் ஸ்ரீஜி மகேஸ்வரா என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்து இருக்கிறார். இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.